Home /News /national /

விரைவில் வரப்போகிறது மின்சாரத்தில் இயங்கும் டபுள் டெக்கர் ஏசி பஸ்கள்.. எங்கு தெரியுமா?

விரைவில் வரப்போகிறது மின்சாரத்தில் இயங்கும் டபுள் டெக்கர் ஏசி பஸ்கள்.. எங்கு தெரியுமா?

டபுள் டெக்கர் ஏசி பஸ்கள்

டபுள் டெக்கர் ஏசி பஸ்கள்

மும்பை நகரில் ஓட கூடியது என்று உடனடியாக அடையாளம் காண கூடிய வாகனங்களில் ஒன்று மும்பையின் கலாச்சார வாகனமாக குறிப்பிடப்படும் இரட்டை அடுக்கு பேருந்துகள். இதுநாள் வரை எரிபொருளில் இயங்கி வந்த இது விரைவில் மின்சாரத்தில் இயங்க உள்ளது.

மும்பைக்கு 900 ஏசி எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பஸ்களை 12 ஆண்டுகளுக்கு வெட்-லீஸிற்கு (wet-lease) வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அந்த மாநிலத்தின் BEST கமிட்டி செவ்வாய் அன்று ஏற்றுக் கொண்டது. இந்த திட்டத்திற்கு 3,600 கோடி ரூபாய் செலவாகும் என்று அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏராளமான சின்னச் சின்ன நினைவுச்சின்னங்கள், கட்டமைப்புகள் மற்றும் வாகனங்கள் கூட மும்பையை நாட்டின் வேறு எந்த நகரத்திலிருந்தும் வேறுபடுத்துகின்றன.

மும்பை நகரில் ஓட கூடியது என்று உடனடியாக அடையாளம் காண கூடிய வாகனங்களில் ஒன்று மும்பையின் கலாச்சார வாகனமாக குறிப்பிடப்படும் இரட்டை அடுக்கு பேருந்துகள். இதுநாள் வரை எரிபொருளில் இயங்கி வந்த இது விரைவில் மின்சாரத்தில் இயங்க உள்ளது.

பிரஹன் மும்பை எலெக்ட்ரிசிட்டி சப்ளை அண்ட் டிரான்ஸ்போர்ட் (BEST) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தளமாகக் கொண்ட ஒரு குடிமை போக்குவரத்து மற்றும் மின்சாரம் வழங்கும் பொது அமைப்பாகும். இது முதலில் 1873 இல் "பாம்பே டிராம்வே கம்பெனி லிமிடெட்" என்ற டிராம்வே நிறுவனமாக அமைக்கப்பட்டது. இதனிடையே மும்பை நகர சாலைகளில் இயங்கும் வகையில் சுமார் 900 ஏசி எலெக்ட்ரிக் டபுள் டெக்கர் பேருந்துகளை BEST நிர்வாகம் வாங்க உள்ளது என்று மகாராஷ்டிர மாநில சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே சமீபத்தில் தகவல் தெரிவித்து உள்ளார்.சோஷியல் மீடியாவான ட்விட்டரில் இது தொடர்பாக போட்டோ ஒன்றுடன் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ள அமைச்சர் ஆதித்யா தாக்கரே, இதுபோன்ற 900 எலெக்ட்ரிக் பஸ்கள் விரைவில் BEST மூலம் வாங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும் நானும் மும்பையின் சின்னமான இரட்டை அடுக்கு பேருந்துகளை புதுப்பிக்க தனிப்பட்ட முறையில் ஆர்வமாக உள்ளோம் என்றும் அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

  

அமைச்சர் ஆதித்யா தாக்கரே தனது ட்விட் ஒன்றில் எங்கள் சிறந்த போக்குவரத்து வசதியை அதிகரிக்கும் நோக்கில் 10,000 எலெக்ட்ரிக்/க்ளீன் ஆல்ட்டர்நேட்டிவ் ஃப்யூயல் பஸ்களை புழக்கத்தில் விட முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், எங்கள் நோக்கம் எங்கள் திறனை எடுத்துக்காட்டும் வகையில்அதிகபட்ச இரட்டை அடுக்கு பேருந்துகளை பயன்பாட்டில் விட வேண்டும் என்பதே என்று கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள் :  முழுக்க முழுக்க டிஜிட்டல் பட்ஜெட்.. அல்வா கிண்டுவது நிறுத்தம்!

மேலும் மகாராஷ்டிர அரசின் இந்த புதிய முயற்சி, மும்பை நகர சாலைகளில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓடத் தொடங்குவதற்கு ஊக்கமாக இருக்கும். மேலும் இந்த ஜீரோ-எமிஷன், ஜீரோ சத்தம் கொண்ட EV டிரைவ், மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் புழக்கத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மும்பையை தவிர, எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்கும் மற்ற நகரங்களின் முனிசிபல் கமிஷனர்களையும், பிஸியான வழித்தடங்களில் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பேருந்துகளை தங்கள்போக்குவரத்தில் சேர்க்கும்படி கேட்டு கொண்டுள்ளதாக அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறி இருக்கிறார். BEST நிறுவனம் மும்பை மற்றும் தானே, மீரா-பயந்தர் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட அண்டை நகரங்களில் பொது பேருந்து சேவைகளை வழங்குகிறது. BEST பேருந்துகளில் தினமும் சுமார் 25 லட்சம் பயணிகள் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. BEST ஓரிரு ஆண்டுகளில் தனது பயணிகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும், 2027க்குள் 100% எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric Buses, Mumbai

அடுத்த செய்தி