இரண்டு அவித்த முட்டை விலை ரூ.1,700... பணக்கார கோழி போல..!

2 வாரங்களுக்கு முன்பு சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் 2 வாழைப்பழம் வாங்கியதற்கு 442 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது

news18
Updated: August 12, 2019, 8:17 AM IST
இரண்டு அவித்த முட்டை விலை ரூ.1,700... பணக்கார கோழி போல..!
முட்டை விலை
news18
Updated: August 12, 2019, 8:17 AM IST
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டல் இரண்டு அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 கட்டணம் வசூலித்துள்ளது.

கார்த்தி தார் என்பவர் மும்பையில் உள்ள Four Seasons என்ற ஹோட்டலில் ஆம்லெட், அவித்த முட்டை, கூல்டிருங்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டுள்ளார். ஹோட்டல் நிர்வாகம் கொடுத்த விலைப்பட்டியலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஹோட்டல் நிர்வாகம் 2 அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 கட்டணம், 1 ஆம்லெட்டுக்கு ரூ.850 கட்டணம் என பில் போட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் அந்த பில்லின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘2 முட்டையின் விலை ரூ.1700. பணக்கார கோழியாக இருக்கும் போல’ என்று பதிவிட்டுள்ளார்.

2 eggs for Rs 1700 at the @FourSeasons Mumbai. @RahulBose1 Bhai Aandolan karein? pic.twitter.com/hKCh0WwGcyஇதையடுத்து பலரும் அந்த ட்விட்டை ரீ ட்வீட் செய்து ஹோட்டல் நிர்வாகத்தை கிண்டல் செய்தும், திட்டியும் வருகின்றனர்.

முன்னதாக 2 வாரங்களுக்கு முன்பு சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் 2 வாழைப்பழம் வாங்கியதற்கு 442 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவித்த அதிருப்தியை அடுத்து அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு கலால் வரித்துறை 25,000 ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது

Also watch

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...