Home /News /national /

அன்று 13 லட்சம்… இன்றைய மதிப்பு 8 கோடி… 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த திருடப்பட்ட தங்கம்

அன்று 13 லட்சம்… இன்றைய மதிப்பு 8 கோடி… 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த திருடப்பட்ட தங்கம்

22 ஆண்டுகளுக்குப் பிறகு, 8 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள "திருடப்பட்ட" சொத்தை திரும்ப பெற்றுள்ளதால் பிரபல பேஷன் பிராண்டான சரக் தின் உரிமையாளர்கள் பெரும் நிம்மதியை அடைந்ததுள்ளனர்.

நாம் இங்கே பேசும் "திருடப்பட்ட" சொத்தானது ஒரு நீதிமன்ற உத்தரவின் கீழ் சரக் தின் (Charagh Din) நிறுவனர் ஆன அர்ஜன் தஸ்வானியின் மகன், ராஜு தஸ்வானிக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது.

விக்டோரியா மகாராணியின் படம் பொறித்த தங்க நாணயம், 100 கிராம் மற்றும் 200 மில்லி கிராம் எடையுள்ள இரண்டு தங்க பிரேஸ்லெட்கள் மற்றும் இரண்டு இங்காட்களை (தங்கக்கட்டிகளாக இருக்கலாம்) ராஜு தஸ்வானியிடம் ஒப்படைக்குமாறு கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அமர்வு நீதிபதி ஆன யுஜே மோர் உத்தரவு பிறப்பித்தார்.

22 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்குறிப்பிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 13 லட்சமாக இருந்தது, தற்போது அவைகளின் மதிப்பு ரூ.8 கோடிக்கு மேல் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க | செல்போனுக்குள் ஒளிந்திருக்கும் ஆன்லைன் சூதாட்டம் எனும் அரக்கன்! முற்றுப்புள்ளி வைப்பதாக முதல்வர் வாக்கு… சட்டம் சொல்வதென்ன?

அரசு வழக்கறிஞர் இக்பால் சோல்கர் மற்றும் கொலாபா காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஆன சஞ்சய் டோனர் ஆகியோர்கள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட சொத்தை திருப்பித் தருவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தனர்.

பின்னர் ராஜு தஸ்வானி குறிப்பிட்ட சொத்துக்களின் பில் மற்றும் ரசீதுகளை சமர்ப்பித்தார், அதன் வழியாக குறிப்பிட்ட 8 கோடிக்கும் மேலான மதிப்புள்ள சொத்து அவரது குடும்பத்திற்கு சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

‘இந்த பொருட்களை, குறிப்பாக தங்கத்தை, போலீஸ் காவலில் வைத்திருப்பதில் எந்த நோக்கமும் இருப்பது போல் தெரியவில்லை. திருட்டு நடந்து 19 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தலைமறைவான குற்றவாளியைக் கைது செய்வதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதன் கீழ், ஒரு புகார்தாரர் தனது சொந்தச் சொத்தை திரும்பப் பெறுவதற்காக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறினால், அது நீதியைக் கேலிக்கூத்தாக்குவதாகவும், சட்டச் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதாகவும் இருக்கும்’ என்று நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், கடந்த 1998ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதியன்று கொலாபாவில் உள்ள அர்ஜன் தஸ்வானியின் வீட்டில் கத்தியுடன் நுழைந்த ஒரு திருட்டு கும்பலால் மேற்குறிப்பிட்ட தங்க பொருட்கள் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டது. அந்த திருட்டு கும்பல் அர்ஜன் தஸ்வானியின் பாதுகாவலரை தாக்கியதோடு, தஸ்வானியையும் அவரது மனைவியையும் கட்டிப்போட்டு விட்டு, பொருட்கள் இருக்கும் பெட்டகத்தின் சாவியை பலவந்ததாக எடுத்து அதை திருடியும் சென்றது.

இதையும் படிங்க | ’எல்லோரும் 2 டோஸ் போட்டவர்கள்’ ஐஐடி ஹைதராபாத் மாணவர்களை துரத்தும் கொரோனா!

இந்த திருட்டு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் கைது செய்யப்பட்டனர் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி கடந்த 1998ஆம் ஆண்டிலேயே மீட்கவும் பட்டது. அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு விசாரணையில் கைது செய்யயப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று குற்றவாளிகள் இன்றும் தலைமறைவாகவே உள்ளனர். இதற்கிடையில் அர்ஜன் தஸ்வானி கடந்த 2007ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, பொருட்களை உரியவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை விற்கவும் முடியாது, தவறினால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், இது சார்பாக ஒரு விரிவான ஒப்படைப்பு அறிக்கையை தயாரிக்குமாறும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கனடாவிலும் அமெரிக்காவிலும் வசிக்கும் ராஜுவின் சகோதரிகள் - அதாவது சொத்தின் சட்டப்பூர்வ வாரிசுகள் - அவரிடம் குறிப்பிட்ட தங்க பொருட்களை ஒப்படைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் சான்றிதழ் அளித்துள்ளனர்.
Published by:Archana R
First published:

Tags: Gold Theft, India, Mumbai

அடுத்த செய்தி