தெருவில் வசித்து வந்த நாயினுடைய ஆண் உறுப்பை மர்ம நபர் வெட்டி துண்டாக வீசிய கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்காதல் விவகாரத்தில் அல்லது உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய கணவர்களின் ஆண் உறுப்புகளை பெண்கள் துண்டாக்கிய சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தெருவில் சுற்றித்திரியும் நாயின் ஆண் உறுப்பை ஒருவர் துண்டாக்கியிருப்பது சைக்கோ மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பையின் வடக்கு அந்தேரியில் கபஸ்வாடி பகுதியில் கடந்த டிசம்பர் 25ம் தேதி நள்ளிரவு தெருவில் வசித்து வந்த நாய் ஒன்றின் ஆண் உறுப்பை மர்ம நபர் ஒருவர் துண்டாக வெட்டியிருப்பது தெரியவந்தது.
ஆண் உறுப்பு வெட்டப்பட்டதால் ரத்தம் வழிந்தோடிய நிலையில் அந்த நாயை மும்பை பரேல் பகுதியில் செயல்பட்டு வரும் SPCA கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். நாயின் உயிரை காப்பாற்ற உடனடியாக அவசர அறுவை சிகிச்சை ஒன்று மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் நாயின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Also read: அங்கிள் என அழைத்த 18 வயது பெண் மீது 35 வயது கடைக்காரர் சரமாரி தாக்குதல்
இச்சம்பவம் குறித்து கபஸ்வாடி பகுதியில் நாய்களுக்கு உணவளித்து வரும் விலங்கின ஆர்வலரான அபான் மிஸ்திரி கூறுகையில், நாயின் நிலை குறித்து கேள்விப்பட்டவுடன் உடனடியாக அங்கு விரைந்து சென்று இப்படியொரு மோசமான சம்பவத்தை அரங்கேற்றியது யார் என அங்கிருந்த மக்களிடம் விசாரித்தோம், ஹீனா என்ற விலங்கின ஆர்வலுடன் சேர்ந்து உயிருக்கு போராடிய நாயை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம் என்றார்.
பாம்பே உயர்நீதிமன்றத்தால் விலங்கு நல சட்டங்களை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட விலங்குகள் நல அலுவலர் நந்தினி குல்கர்னி கூறுகையில், இது மிகவும் அதிர்ச்சிகர சம்பவம். யாரோ ஒருவரால் அப்பாவி ஜீவனின் ஆண் உறுப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மும்பை போலீசார் இது குறித்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். மேலும் டி.என் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறோம். சிசிடிவி காட்சிகளில் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என விசாரிக்குமாறு காவல்துறையினரிடன் வேண்டுகோள் வைத்துள்ளோம் என்றார்.
Also read: பிரதமர் மோடியின் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் - என்ன ஸ்பெஷல்?
இதனிடையே விலங்குகளுக்கு எதிரான PCA 1960 சட்டத்தை திருத்த வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். இந்த சட்டத்தின்படி, விலங்குகளை துன்புறுத்துபவர்கள் 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Mumbai, Pet animals