Home /News /national /

டெல்லி, மும்பையில் குறையும் கொரோனா பாதிப்பு... தடுப்பூசி பணிகள் தீவிரம்

டெல்லி, மும்பையில் குறையும் கொரோனா பாதிப்பு... தடுப்பூசி பணிகள் தீவிரம்

Corona Vaccinne

Corona Vaccinne

டெல்லியில் கடந்த 13-ம்தேதி 28,867 பேருக்கு பாதிப்பு என்ற உச்ச அளவை பெற்றிருந்தது. அன்றைக்கு பாசிட்டிவ் ரேட் 30.6 ஆக இருந்தது. இதன்பின்னர்தான் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

    தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    டெல்லியை பொருத்தளவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 4,483 ஆக இருந்தது. இந்த பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 3,674 ஆக குறைந்துள்ளது. கொரானா பாசிட்டிவ் 6.37 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனா பாசிட்டிவ் 7.41 சதவீதமாக இருந்தது.

    ஒட்டுமொத்த அளவில் டெல்லியில் 18,27,489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25,827 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதற்கு முன்பாக வெள்ளியன்று பாதிப்பு 4,044 ஆக இருந்தது.

    அன்றைய தினம் பாசிட்டிவ் ரேட் 8.60 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாளில் பாசிட்டிவ் ரேட் 9.56 ஆக இருந்தது. தொடர்ந்து கொரோனா பாசிட்டிவ் ரேட் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    இங்கு கடந்த 13-ம்தேதி 28,867 பேருக்கு பாதிப்பு என்ற உச்ச அளவை பெற்றிருந்தது.அன்றைக்கு பாசிட்டிவ் ரேட் 30.6 ஆக இருந்தது. இதன்பின்னர்தான் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பு... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

    இதேபோன்று மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 1,160 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,530 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். புதிதாக பதிப்பு ஏற்பட்டவர்களில் 1,009 பேருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. 160 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 29 பேருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. மொத்தம் உள்ள 37,573 படுக்கைகளில் 2,268 படுக்கைகள் நிரம்பியுள்ளன.

    இதையும் படிங்க ...  சீனாவிலிருந்து இன்னொரு கொரோனா வைரஸ் NeoCoV: இறப்பு விகிதம் 3-க்கு 1- பரவல் விகிதமும் அதிகம்-ஆய்வில் பகீர்

    தொற்றிலிருந்து குணம் அடைவோர் சதவீதம் 97 ஆக உள்ளது. பாதிப்பு இரு மடங்காக உயரும் நாட்களின் எண்ணிக்கை 375 ஆக இருக்கிறது. தினசரி பாதிப்பின் பாசிட்டிவ் ரேட் 2.5 சதவீதமாக உள்ளதென மும்பை மாநகர கமிஷனர் ஐ.எஸ். சாஹல் கூறியுள்ளார். இதேபோன்று இந்தியாவின் மற்ற சில மாநிலங்களிலும் பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி