ஹோம் /நியூஸ் /இந்தியா /

கண்ணாடிக்கு பின் ரகசிய அறை.. 17 பெண்கள் மீட்பு... அதிரவைத்த மும்பை பார் - வைரல் வீடியோ

கண்ணாடிக்கு பின் ரகசிய அறை.. 17 பெண்கள் மீட்பு... அதிரவைத்த மும்பை பார் - வைரல் வீடியோ

கண்ணாடிக்கு பின் ரகசிய அறை.. 17 பெண்கள் மீட்பு... அதிரவைத்த மும்பை பார் - வைரல் வீடியோ

கண்ணாடிக்கு பின் ரகசிய அறை.. 17 பெண்கள் மீட்பு... அதிரவைத்த மும்பை பார் - வைரல் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில், பார் ஒன்றில், சுவரில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிக்குப் பின்னால் இருந்த அறையில் இருந்து 17 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் மது விடுதிகளான பார்களில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க இளம்பெண்கள் நடனமாடுவது வழக்கமான ஒன்று கோவிட்டுக்கு முந்திய காலங்களில் இதுபோன்ற நடனங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. ஆனால் கோவிட்டுக்குப் பிறகு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் முடங்கின.

  இந்த நிலையில், கோவிட் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன; எனினும் மும்பையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பார்களில் பல கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன மும்பை அந்தேரியில் உள்ள தீபா பார் என்ற இடத்தில், கோவிட் கட்டுப்பாடுகளை மீறி, இரவு முழுவதும் இளம்பெண்கள் நடனம் நடப்பதாக போலீசாருக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் புகார் அளித்தது.

  அதன் அடிப்படையில், மும்பை போலீசார் சனிக்கிழமை அன்று இரவு 11 மணிக்கு அந்த பாரில் திடீர் சோதனை மேற்கொண்டனர் பாரில் உள்ள சமையலறை, கிடங்குகள், கழிவறைகள் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தியும் ஒரு இளம்பெண் கூட அங்கு இல்லை. பார் ஊழியர்களிடம் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தியும், அப்படி ஒரு நடன நிகழ்ச்சி தங்கள் பாரில் நடக்கவில்லை என அவர்கள் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

  இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல்துறை உயரதிகாரி அந்த பாருக்கு சென்றார். மீண்டும் அனைத்து இடங்களையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஒப்பனை அறையில் மட்டும் மிகப் பெரிய கண்ணாடி வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தார்; அந்தக் கண்ணாடியை உடைக்க உத்தரவிட்டார். போலீசார் பெரிய சுத்தியல் கொண்டு அந்தக் கண்ணாடியை மிகச் சிரமப்பட்டு உடைத்தனர்; அதன் பின்னால் இருந்த செங்கற்களும் உடைந்து விழுந்த போதுதான் அங்கு ஒரு சிறிய அறை இருந்தது தெரியவந்தது.

  ' isDesktop="true" id="638959" youtubeid="Jnnil9Uw348" category="national">

  அந்த அறையில் பதுங்கியிருந்த 17 இளம்பெண்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அந்த மிகச் சிறிய அறையில், உணவு, தண்ணீர், ஏசி, படுக்கை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். புகாரில் கூறியபடி அந்த பார் நிர்வாகம், இரவு முழுவதும் இந்த இளம்பெண்களை வைத்து நடன நிகழ்ச்சி நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

  Also Read : சதுரங்க வேட்டை பாணியில் தஞ்சையில் நடந்த சம்பவம் - பல கோடி மோசடி செய்த கும்பல்

  இதையடுத்து 17 இளம்பெண்கள் மற்றும் பார் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் என 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கண்ணாடியை உடைப்பதும், அந்த அறையில் இருந்து இளம்பெண்கள் வெளியே வருவதுமான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

  Published by:Vijay R
  First published:

  Tags: Crime News, Mumbai