முகப்பு /செய்தி /இந்தியா / மும்பையில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு

மும்பையில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: பலி எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு

பலி எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு

பலி எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு

Mumbai : மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 20 முதல் 25 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை குர்லா பகுதியில் உள்ள நாயக் நகரில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அதில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்த நிலையில், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 20 முதல் 25 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து அறிந்த மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம் அபாய நிலையில் இருந்த போதே மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் மக்கள் தொடர்ந்து வசித்ததால் துரதிருஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்து தெரிவித்தவர் தலை துண்டித்து படுகொலை.. வீடியோ வெளியிட்டு மிரட்டல்

மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் அங்கே மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையல், இந்த விபத்தில் இடிபாடுகளில் இருந்து 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Building collapse, Mumbai