ஹோம் /நியூஸ் /இந்தியா /

இரும்புத்திரை சினிமா போன்ற சம்பவம்: ரூ.143 கோடி வங்கி பணம் சுருட்டல்

இரும்புத்திரை சினிமா போன்ற சம்பவம்: ரூ.143 கோடி வங்கி பணம் சுருட்டல்

மாதிரி படம்

மாதிரி படம்

மொரிஷியஸ் ஸ்டேட் பாங்கின் மும்பை கிளையின் சர்வரை ஹேக் செய்து ரூ.143 கோடி திருடப்பட்டுள்ளது

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஸ்டேட் பாங்க் ஆஃப் மொரிஷியஸ் வங்கியின் மும்பை கிளையின் சர்வரை ஹேக் செய்து வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.143 கோடியை மர்ம கும்பல் சுருட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  ஸ்டேட் பாங்க் ஆஃப் மொரிஷியஸ் வங்கி மும்பையில் உள்ள நரிமன் பாய்ண்ட் பகுதியில் உள்ளது. இந்நிலையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் வங்கி சார்பில் கடந்த 5-ம் தேதி ஒரு புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், வங்கியின் சர்வரை ஹேக் செய்துள்ள மர்ம கும்பல் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்த பணத்தை திருடி அவர்களின் கணக்கிற்கு மாற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  சுமார் ரூ.143 கோடியை சுருட்டியுள்ள இந்த கும்பல் வெளிநாட்டில் இருந்து இயங்கியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர், புனேவின் காஸ்மோஸ் வங்கியின் தலைமையகத்தில் நடந்த சைபர் தாக்குதலில் ரூ.94 கோடி சுருட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Sankar
  First published:

  Tags: Cyber attack, Cyber fraud, Mumbai, State Bank of Mauritius