• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தனது பேத்தியின் படிப்பிற்காக வீட்டை விற்ற ஆட்டோ ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள்!

தனது பேத்தியின் படிப்பிற்காக வீட்டை விற்ற ஆட்டோ ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள்!

ஆட்டோ ஓட்டுநர் தேஸ்ராஜ்

ஆட்டோ ஓட்டுநர் தேஸ்ராஜ்

தனது பேத்தி 12 ஆம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்களை பெற்ற போது இவை அனைத்தும் மதிப்பிற்குரிய கஷ்டங்களாகவே அவருக்கு தோன்றியதாக நெகிழ்கிறார். இந்த விஷயத்தை கொண்டாடுவதற்காக அவர் ஒரு நாள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆட்டோ சவாரியையும் வழங்கியுள்ளார்.

  • Share this:
மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது பேத்தியின் படிப்பு செலவிற்காக தனது வீட்டை விற்று கல்லூரிக்கு பணம் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேஸ்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இரண்டு பேருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், அவரது மூத்த மகன் திடீரெனெ ஒரு நாள் வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை பின்னர் அவரது உடலானது காணாமல் போன ஒரு வாரத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவரது மற்றொரு மகனும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இதனால் தேஸ்ராஜ் தனது மனைவி, மருமகள்கள் மற்றும் 4 பேரக்குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்க தொடங்கினார்.

மேலும் தனது மகன்கள் மறைவு குறித்து பேசிய அவர், ஒரு தந்தைக்கு இதைவிட துயரமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.

இதன்பின்னர் தேஸ்ராஜ் தனது நான்கு பேரக்குழந்தைகளின் கல்விக்காகவும், குடும்பத்தினரின் அன்றாட தேவைகள், சாப்பாட்டிற்காகவும் போராட தொடங்கினார். இதுகுறித்து NDTV நேர்காணலில் பேசிய தேஸ்ராஜ், பெரும்பாலான நாட்களில் நாங்கள் சாப்பிட எதுவும் இருந்ததில்லை என வேதனையுடன் கூறினார்.

இருப்பினும் தனது பேத்தி 12 ஆம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்களை பெற்ற போது இவை அனைத்தும் மதிப்பிற்குரிய கஷ்டங்களாகவே அவருக்கு தோன்றியதாக நெகிழ்கிறார். இந்த விஷயத்தை கொண்டாடுவதற்காக அவர் ஒரு நாள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆட்டோ சவாரியையும் வழங்கியுள்ளார். ஆனால் அடுத்ததாக அவரது பேத்தி டெல்லி சென்று பி.எட் படிக்க வேண்டும் என கூறிய போது அது நம்மால் இயலாத காரியம் என்பதை தேஸ்ராஜ் அறிந்திருந்த போதும் பேத்தியின் விருப்பத்தை தடுக்கவில்லை.

மேலும் சற்றும் யோசிக்காமல் தாங்கள் தங்கியிருந்த வீட்டை விற்று பேத்தியின் கல்வி கட்டணத்தை செலுத்தியுள்ளார். இதனையடுத்து தனது குடும்ப உறுப்பினர்களை தங்கள் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவர் தனது ஆட்டோவிலேயே வசித்து வந்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த தேஸ்ராஜ், “வீடு விற்று தற்சமயம் ஒரு வருடமாகி விட்டது. என் ஆட்டோவிலே சாப்பிட்டுக்கொண்டு அதிலேயே உறங்கி கொள்கிறேன். பகலில் பயணிகளை ஏற்றி பணம் சம்பாதிக்கவும் இரவில் எனக்கு தூங்குவதற்கும் இதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்” என்று கூறினார்.

என் பேத்தி கல்லூரி முடித்து வந்த பிறகு நான் அவளை கட்டிப்பிடித்து நீ என்னை மிகவும் பெருமைப்பட செய்துவிட்டாய் என கூறுவேன். எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக அவள் இருக்க போகிறாள். அப்படி நடக்கும்போது நான் மீண்டும் எனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரியை வழங்குவேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். இந்த நெகிழ்ச்சிக் கதையை காங்கிரஸை சேர்ந்த அர்ச்சனா டால்மியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தேஸ்ராஜின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து அவருக்கு உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் தேஸ்ராஜை பாராட்டியுள்ளனர். மேலும் இவருக்காக நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் இதுவரை 276 நன்கொடையாளர்கள் மொத்தமாக 5.3 லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: