முகப்பு /செய்தி /இந்தியா / புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சி.. மும்பை விமான நிலையத்தில் மின்சார வாகனங்கள் அறிமுகம்

புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சி.. மும்பை விமான நிலையத்தில் மின்சார வாகனங்கள் அறிமுகம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மும்பை விமான நிலையத்தில் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் மார்ச் 2024ம் ஆண்டுக்குள் 100 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பயன்படுத்த விமான நிலைய நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக நாடுகள் அனைத்திற்கும் புவி வெப்பமயமாதல் என்பது பொதுவான பிரச்னையாக மாறியுள்ளது. மனிதனின் செயல்பாடுகள் காரணமாக புவியை பாதுகாக்கும் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. இதனால், சூரிய கதிர்கள் நேரடியாக புவியை தாக்குவதால், பூமியின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்குகிறது.இதன் விளைவாக, பனிப் பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் படிப்படியாக உயர்வதால், கடலையொட்டியுள்ள பகுதி மூழ்கி விடுகின்றன. இதேப்போல் மக்கள் தொகை அதிகரித்து வருவதை தொடர்ந்து வாகன பயன்பாடுகளும் அதிகரித்து வருகிறது.

இதனால் வாகனங்களில் இருந்து வரும் கார்பன் வெளியீட்டு புகையால் புவி வெப்பமயமாதல் போன்ற இயற்கை சீரழிவுகள் ஏற்படுகிறது.சர்வதேச அளவில் இந்தப் பிரச்னைதான் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவிலும், கார்பன் வெளியீட்டை குறைக்க புதிய ஆற்றல் மூலங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தின் 74 சதவிகித உரிமையை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

நாட்டில் உள்ள முக்கிய ஏழு விமானங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் அதானி நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் என்ற பெருமையை கொண்ட மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தவும் புவி வெப்பமயமாதலை தடுக்கும் ஒரு முயற்சியாகவும், விமான நிலைய பயன்பாட்டுக்கான வாகனங்களில் மின்சார வாகனங்களை ஈடுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 45 மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டுக்குள் 60ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த விமான நிலையத்தில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது. விமான நிலையத்தில் மல்டி-லெவல் கார் பார்க்கிங் மற்றும் டெர்மினல்கள் 1, 2 மற்றும் விமான நிலையத்தில் 12 (DC) சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.

விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்கள், பாதுகாப்பு வாகனங்கள், பராமரிப்பு பயன்பாட்டு வாகனம் உள்ளிட்டவை அடுத்த நிதியாண்டில் மின்சார வாகனங்களாக மாற்றப்படவுள்ளன. மீதமுள்ள வாகனங்கள் படிப்படியாக மாற்றப்படும் என்று தனியார் விமான நிலைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைத்து ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வை கொண்ட நடவடிக்கைக்கு CSMIA (Chatrapati Shivaji Maharaj International Airport)பெருமிதம் கொள்வதாக அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பையில் தொடங்கப்பட்டது போல அதானி குழுமம் பங்குதாரராக உள்ள மற்ற விமான நிலையங்களிலும் இந்த மின்சார வாகன திட்டங்கள் கொண்டுவந்தால் புவி வெப்பமயமாதல் தடுக்கப்படலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: India, Mumbai