Home /News /national /

முல்லைப் பெரியாறு அணை திறப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணை திறப்பு... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த்தேக்க கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியதை அடுத்து உபரி நீதி திறக்கப்பட்டதால், கேரளாவில் இடுக்கி கரையோர பகுதி மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் முறைப்படி உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர் தேக்க அளவான 142 அடியை, இன்று அதிகாலை 3.55 மணிக்கு எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 682 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால், வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையினர் சார்பில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த்தேக்க கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 2014, 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டிருந்தது.

    Also Read : கடவுள் ஆசீர்வதித்தால் நாட்டில் உள்ள மதரஸாக்களை மூடுவேன் - உ.பி அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

    தற்போதும் 4வது முறையாக தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. "ரூல் கர்வ்" முறைப்படி நவம்பர் 30ம் தேதியான இன்று முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்க வேண்டும், அதேநேரம், போதுமான மழையும் கேரளாவில் பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Mullai Periyar Dam

    அடுத்த செய்தி