Home /News /national /

முல்லை பெரியாறு விவகாரம் ஸ்டாலின் கடிதம் நம்பிக்கை தருகிறது - கேரள எம்.பி பிரேமசந்திரன்

முல்லை பெரியாறு விவகாரம் ஸ்டாலின் கடிதம் நம்பிக்கை தருகிறது - கேரள எம்.பி பிரேமசந்திரன்

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

முல்லைபெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் லட்சக் கணக்கான மக்களை மத்திய அரசும் நீதிமன்றம், தமிழக அரசும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் நம்பிக்கை தருவதாக கேரள எம்.பி பிரேமசந்திரன் கூறியுள்ளார். 

    கேரளா முன்னாள்  நீர் பாசன அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ தமிழகம் மற்றும் கேரளா  அரசாங்கங்கள் பேசி அரசியல் ரீதியிலான உடன்பாட்டை எட்ட வேண்டும். அதற்கு முல்லைபெரியாறில் புதிய அணை கட்டுவதே தீர்வு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் வரவேற்கத்தக்கது நம்பிக்கை தருகிறது. 999 வருடங்களுக்கு அணை பாதுகாப்பாக இருக்கும் என தமிழக அரசால் கேரளா மக்களுக்கு உறுதியளிக்க முடியுமா.

    126 ஆண்டு பழைமையான அணைக்கு பதில் புதிய அணையை கட்டி தற்போதைய தேவைக்கு ஏற்ப புதிய ஒப்பந்தத்தை போட வேண்டும். கேரளா அரசு மற்றும் அனைத்து கட்சிகளின் கோரிக்கையும் இதுதான்.  புதிய ஒப்பந்தத்தால் தமிழகத்திற்கு வரும் நீர் கிடைக்காதோ என்பதால் தான் தமிழக அரசு புதிய அணைக்கு அனுமதி மறுத்து வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் நீர் எதனாலும் தடைபடாது.முல்லைபெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் லட்சக் கணக்கான மக்களை மத்திய அரசும் நீதிமன்றம், தமிழக அரசும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    காலநிலை மாற்றத்தால் பெய்யும் மழை அளவு அதிகரித்து வெள்ளம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்டு வருகிறது. அதற்கான தீர்வை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.2018 ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறில் ஏற்பட்ட வெள்ளத்திற்காக தமிழகத்தை குறை கூற முடியாது. அணை நிறைந்து வெள்ள நீர் வெளியேறும் போது நான்கு மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள சட்டசபையில் முதல்வர் கூறியது துரதிருஷ்டவசமானது.” என்றார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Kerala, MKStalin, Mullai Periyar, Mullai Periyar Dam, Tamilnadu

    அடுத்த செய்தி