முல்லைப்பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவை மாற்றியமைக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் பரஸ்பரம் குற்றச்சாட்டை கூறி வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இவற்றை நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவிற்கு தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு நிகரான அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். அல்லது மேற்பார்வை குழுவை மாற்றியமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க - எழுவர் விடுதலை: ஆவணங்களை குடியரசு தலைவருக்கு ஆளுனர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தகவல்
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அணை மேற்பார்வை குழுவை கலைக்க மறுப்பு தெரிவித்தனர். தேவைப்பட்டால் இரு மாநிலங்கள் சார்பில் தலா ஒரு அதிகாரியை மேற்பார்வை குழுவில் நியமிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இது தொடர்பான விரிவான உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க - குற்றவியல் நடைமுறை மசோதா, அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது: ப.சிதம்பரம்
முன்னதாக வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்டே, 'முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை.
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அதிகாரிகள் இடையூறு செய்கின்றனர். கேரளா தடையாக இருந்தால், முல்லைப்பெரியாறு அணையை எப்படி பராமரிக்க முடியும். மழைக்காலத்தின் போதெல்லாம் அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி கேரளா பிரச்சனை செய்கிறது. மேற்பார்வை குழு அனுமதி தந்தாலும் வேலை செய்ய விடாமல் கேரள அரசு தடுக்கிறது.' என்று வாதிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.