Home /News /national /

முல்லைப் பெரியாறு ஆணை..கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு ஆணை..கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு பின்பற்றுவதில்லை என்று தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்பார்வை குழுவின் பதிந்துரைகளை பின்பற்றாத கேரள அரசின் தலைமை செயலாளருக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும்,  ஒவ்வொரு முறையும் புதிய புதிய விவாதங்களை நடத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான, இறுதி விசாரணை இரண்டாவது நாளாக நடைபெற்றது. அப்போது, பராமரிப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு, சாலை போடும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக, இருமாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு மேற்பார்வைக் குழுவே தீர்வு காணும் எனவும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வரவேண்டாம் எனவும், நீதிபதி கண்வில்கர் கண்டித்தார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சேகர் நாப்டே, 2006 ஆம் ஆண்டே அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.2014 ஆம் ஆண்டு தீர்ப்புக்குப் பின்னர்,  அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் உத்தரவுகள் எதனையும் கேரள அரசு பின்பற்றுவதில்லை என்று தெரிவித்தார்.

    மத்திய நீர் ஆணைய வழக்கறிஞரும் இதே வாதத்தை முன்வைத்தார். அப்போது மேற்பார்வை குழுவின் பதிந்துரைகளை பின்பற்றாத கேரள அரசின் தலைமை செயலாளருக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலை தொடர்ந்தால், கேரள தலைமை செயலாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என, நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்


    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, ஆய்வு செய்ய மேற்பார்வை குழுவிற்கு அப்பாற்பட்டு ஏன் புதிய குழுவை அமைக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.  மேற்பார்வைக் குழுவை மாற்றியமைக்கலாமா என்ற நீதிபதியின் கருத்துக்கு,  தமிழ்நாடு மற்றும் கேரளா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் MINUTES OF ORDER விபரங்களை தாக்கல் செய்ய, இருமாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

     

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kerala, Mullai Periyar Dam, Supreme court, Tamilnadu

    அடுத்த செய்தி