ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாஜகவின் பதிலடி - கடும் அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்...

பாஜகவின் பதிலடி - கடும் அதிர்ச்சியில் அகிலேஷ் யாதவ்...

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு பிரதான போட்டியாளராக திகழ்வது சமாஜ்வாதி கட்சி. அக்கட்சியின் நிறுவனர் முலாயம் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தான் தற்போது அக்கட்சியினை தலைமையேற்று நடத்தி வருகிறார்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு பிரதான போட்டியாளராக திகழ்வது சமாஜ்வாதி கட்சி. அக்கட்சியின் நிறுவனர் முலாயம் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தான் தற்போது அக்கட்சியினை தலைமையேற்று நடத்தி வருகிறார்.

அபர்னா யாதவ் பாஜகவில் இணைவது அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

   அகிலேஷ் யாதவின் நெருங்கிய உறவினர் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் , உ.பி அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

  இந்தியாவே உற்று நோக்கும் தேர்தல் களமாக மாறியிருக்கிறது உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்போடு முதல்வர் யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு கடுமையான சவால் அளிக்கும் வகையிலான தேர்தல் பணியில் ஈடுபட்டு பாஜகவினருக்கு சவால் விடுகிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி.

  சமாஜ்வாதிக்கு ஆதரவாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும், பிற சிறிய கட்சிகளும் இருந்து வருகின்றன.

  Also read:  உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் - கருத்துக் கணிப்பில் தகவல்

  இதற்கிடையே, சமீப நாட்களாக பாஜகவில் இருந்து பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் வரிசையாக சமாஜ்வாதியில் இணைந்து வந்தனர். குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் ஸ்வாமி பிரசாத் மெளர்யா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் போன்ற யோகி அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த அமைச்சர்கள் திடீரென பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் கட்சியில் இணைந்தனர்.

  இவர்கள் மட்டுமல்லாமல் வினய் ஷாக்யா, ரோஷன் லால், முகேச் வெர்மா, பகவதி சாகர் போன்ற பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் சமாஜ்வாதியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. யாதவ் வாக்குகளை கடந்து அகிலேஷுக்கு செல்வாக்கு கிடையாது என்ற பாஜக தொடர்ந்து சொல்லி வந்தது. இப்படிப்பட்ட சூழலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த ஸ்வாமி பிரசாத் மெளர்யா போன்ற அமைச்சர்களின் வருகை சமாஜ்வாதி கட்சிக்கு பலமாக அமைந்தது.

  Also read:  12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அரசு தகவல்

  பாஜகவுக்கு இதன் மூலம் சரிவு ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில், அகிலேஷ் யாதவின் நெருங்கிய உறவினரை வளைத்துப் போட்டு பதிலடி தர இருக்கிறது பாஜக. முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் சகோதரரான பிரதீக் யாதவின் மனைவி அபர்னா யாதவ் இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அபர்னா யாதவ் பாஜகவில் இணைவது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டது. இருப்பினும் பாஜக தரப்பினர் யாரும் இதுவரை இத்தகவலை உறுதி செய்யாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் பாஜகவின் ஹரியானா மாநில பொறுப்பாளரான அருன் யாதவ், உ.பி பாஜக தலைமையகத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் அபர்னா யாதவ் இன்று காலை 10 மணியளவில் பாஜகவில் இணைய இருப்பதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

  அபர்னா யாதவ் பாஜகவில் இணைவது அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இளம் அரசியல்வாதியான அபர்னா, கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் லக்னோ கண்டோன்மெண்ட் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ரிதா பகுகுனா ஜோஷியிடம் தோல்வி அடைந்தார். அபர்னாவின் bAware அமைப்பு பெண்கள் நல்வாழ்வுக்காக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arun
  First published:

  Tags: BJP, Samajwadi party, Yogi adityanath