மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன் - முலாயம் சிங் யாதவ் மக்களவையில் பேச்சு

பாஜகவை முழு மூச்சாக எதிர்க்க மாயாவதியுடன் கைகோர்த்து அகிலேஷ் யாதவ் செயலாற்றிவரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங், மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன் - முலாயம் சிங் யாதவ் மக்களவையில் பேச்சு
முலாயம் சிங் யாதவ்
  • News18
  • Last Updated: February 13, 2019, 4:34 PM IST
  • Share this:
மக்களவையின் கடைசி நாள் அமர்வு இன்று நடந்து வரும் நிலையில், “மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியுள்ளார்.

நடப்பு பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி அமர்வு இன்றுடன் முடிய உள்ளது. பாஜக அரசின் கடைசி மக்களவை கூட்டத்தொடர் இதுவாகும்.

இன்று கடைசி நாள் என்பதால், இன்று பேசிய பல கட்சித்தலைவர்கள் உருக்கமாக உரையாற்றினர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ் வாதி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில், தற்போது அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மீண்டும் வெற்றி பெற்று அவைக்கு வர வேண்டும் என்று பேசினார்.
மேலும், எதிரே அமர்ந்திருந்த மோடியை பார்த்து, “நீங்கள் மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்” என்று பேசினார். அப்போது அவரின் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்தார்.

பாஜகவை முழு மூச்சாக எதிர்க்க மாயாவதியுடன் கைகோர்த்து அகிலேஷ் யாதவ் செயலாற்றிவரும் நிலையில், அவரது தந்தை முலாயம் சிங், மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also See..

First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்