25 ஆண்டுகளுக்குப் பின் ஒரே மேடையில் மாயாவதி - முலாயம் சிங்!

உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் போட்டியிடும் மெயின்பூர் நகரில் அவருக்காக மாயாவதி பிரசாரம் செய்தார்.

Web Desk | news18
Updated: April 19, 2019, 2:48 PM IST
25 ஆண்டுகளுக்குப் பின் ஒரே மேடையில் மாயாவதி - முலாயம் சிங்!
மாயாவதி- முலாயம் சிங்
Web Desk | news18
Updated: April 19, 2019, 2:48 PM IST
உத்தரபிரதேச அரசியலில் பரம எதிரிகளாக இருக்கும் முலாயம் சிங்- மாயாவதி இருவரும் இன்று ஒன்றாக ஒரே மேடையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.

கடந்த 1995-ம் ஆண்டு முலாயம் சிங்-கின் சமாஜ்வாதி கட்சியினர் மாயாவதி இருப்பிடத்தில் பெரும் அடிதடி கலவரத்தையே ஏற்படுத்தினர்.

அதன் பிறகு உத்தரபிரதேச அரசியலில் எதிரும் புதிருமாக இருந்துவந்த சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கட்சியினர் இன்று ஒன்றாக இணைந்துள்ளனர்.

பாஜக என்னும் ஒரே எதிரியை எதிர்க்க இவ்விரு அணியினரும் ஒன்று கூடுவதாகக் கூறப்படுகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கதைதான் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றன. இன்று உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் போட்டியிடும் மெயின்பூர் நகரில் அவருக்காக மாயாவதி பிரசாரம் செய்தார்.

அரசியல் பேதங்கள் மறந்து இரு கட்சியினரும் இணைந்து கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவது கேட்டுக்கொண்டார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Loading...மேலும் பார்க்க: சிம்புவுக்கு இப்படித்தான் பெண் வேண்டும் - டி.ராஜேந்தர் விருப்பம்

First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...