ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷ்லோகா அம்பானிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அம்பானி தரப்பு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குழந்தையும், தாயான ஷ்லோகாவும் நலமுடன் இருப்பதாகவும், மேத்தா மற்றும் அம்பானி குடும்பத்தினருக்கு இந்தக் குழந்தையின் மிக மகிழ்ச்சியான தருணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா அம்பானி இருவரும் திருபாய் அம்பானி பள்ளியில் சிறுவயது முதலே ஒன்றாக படித்தவர்கள். 2019-இல் நிகழ்ந்த ஷ்லோகா - ஆகாஷ் அம்பானி திருமணத்துக்கு உலகின் பல பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழத்தில் மானுடவியல் (Anthropology) படித்துவிட்டு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் அண்டு பொலிட்டிகல் சயின்ஸில், சட்ட முதுகலைப் படிப்பை முடித்திருக்கிறார் ஷ்லோகா. சமூக சேவையில் ஆர்வமுள்ள ஷ்லோகா, ‘ConnectFor' என்ற தன்னார்வலர் அமைப்பையும் நடத்திவருகிறார்.