இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஷைலா - வீரேன் மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் நிதா - முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா இன்று ராஜஸ்தானில் நாததுவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ ஆனந்த் அம்பானி, மெர்ச்சன்ட் தம்பதியினர் ஸ்ரீநாத்ஜி கோவிலில் தரிசனம் பெற்றனர்.
கடந்த சில வருடங்களாகவே ஆனந்த் மற்றும் ராதிகா பழகி வந்துள்ளனர். இந்நிலையில் மனம் ஒத்து பெற்றோர்கள் அனுமதியோடு இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்தார், பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராகப் பணியாற்றினார். இப்போது RIL இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார். முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மூன்றாவது வாரிசான ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Mukesh ambani