Home /News /national /

விநாயகர் சதுர்த்தி விழா - மும்பையின் பிரசித்தி பெற்ற லால்பகுசா கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழா - மும்பையின் பிரசித்தி பெற்ற லால்பகுசா கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு

முகேஷ் அம்பானி வழிபாடு

முகேஷ் அம்பானி வழிபாடு

மும்பையின் புகழ்பெற்ற லால்பகுசா விநாயகர் கோயிலில் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக, மும்பையில் உள்ள புகழ்பெற்ற லால்பகுசா ராஜா மண்டல் விநாயகர் கோயிலில் நாட்டிலேயே மிக சிறப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவார்கள்.

    சுமார் 89 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை 10 நாள்கள் கொண்டாடி 11ஆம் நாளில் கடலில் சிலையை கரைப்பது வழக்கம். ஆனந்த் சதுர்தசி என்ற 11ஆம் நாளில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்வதற்கு முன்பாக நாட்டின் முன்னணி பிரமுகர்கள் தொடங்கி சுமார் 15 லட்சம் பேர் இந்த விநாயகரை வழிபடுவார்கள். நேற்று ஆனந்த் சதுர்தசி நாளை ஒட்டி ரிலையைன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி லால்பகுசா ராஜா கோயிலுக்கு வந்து விநாயகரை தரிசனம் செய்தார்.

    அவருடன் இளைய மகன் ஆனந்த் அம்பானி உடன் இருந்தார். விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து ஆசி பெற்ற அம்பானி சிறிது நேரம் பிரார்த்தனை செய்து விட்டு விடு திரும்பினார். கடந்த வாரம் மும்பை வருகை தந்த போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விநாயகரை நேரில் தரிசித்து ஆசி பெற்றார்.

    இதையும் படிங்க: டிஜிட்டல் கருவிகளிடம் இருந்து ஓய்வு.. 24 மணிநேரம் 'டிஜிட்டல் விரதம்' இருந்த ஜெயின் மக்கள்

    இன்று விநாயகர் கடலில் கரைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதால் அங்கு சுமார் 8000 போலீசார் பலத்த பந்தோபஸ்த் பாதுகாப்பில் உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், நகர் முழுவதும் உஷார் நிலையில் உள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ganesh Chaturti, Ganesh idols

    அடுத்த செய்தி