உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு எத்தனையாவது இடம்..?
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் உள்ளார்.

முகேஷ் அம்பானி
- News18
- Last Updated: February 27, 2020, 4:35 PM IST
சர்வதேச அளவில் பணக்காரர்கள் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
799 பணக்காரர்கள் உடன் சீனா முதலிடத்திலும் 626 பணக்காரர்கள் உடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்தம் 138 பணக்காரர்கள் உள்ளனர். வெளிநாடுவாழ் இந்தியர்களையும் கணக்கில் சேர்த்தால் எண்ணிக்கை 170 ஆக உள்ளது.
2020-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இப்பட்டியலில் இடம்பெறுவதற்கான அடிப்படைத் தகுதி. 2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியப் பட்டியலில் 34 புதிய பணக்காரர்கள் இணைந்துள்ளனர். இந்தியாவின் டாப் பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்துக்கு 7 கோடி ரூபாய். இந்திய அளவில் அதிகப் பணக்காரர்கள் வாழ்வும் நகரமாக மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்தியப் பணக்காரர்களில் 50 பேர் மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். இரண்டாம் இடத்தில் 30 பணக்காரர்களுடன் புது டெல்லியும் 17 பணக்காரர்கள் உடன் பெங்களூரு 3-ம் இடத்திலும் உள்ளன.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் உள்ளார். இப்பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
மேலும் பார்க்க: டெல்லி வன்முறை குறித்து ஏன் பேசவில்லை?- டிரம்ப்பிடம் கேள்வியெழுப்பிய ஜனாதிபதி வேட்பாளர்..!
799 பணக்காரர்கள் உடன் சீனா முதலிடத்திலும் 626 பணக்காரர்கள் உடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்தம் 138 பணக்காரர்கள் உள்ளனர். வெளிநாடுவாழ் இந்தியர்களையும் கணக்கில் சேர்த்தால் எண்ணிக்கை 170 ஆக உள்ளது.
2020-ம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இப்பட்டியலில் இடம்பெறுவதற்கான அடிப்படைத் தகுதி. 2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியப் பட்டியலில் 34 புதிய பணக்காரர்கள் இணைந்துள்ளனர். இந்தியாவின் டாப் பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.