உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உத்தர பிரதேசத்தின் மீது தனக்கு தனி பாசமும், சிறப்பு பொறுப்பும் உள்ளதாக கூறினார். மோசமான பொருளாதார நிலை கொண்ட மாநிலம் என்று அழைக்கப்பட்ட உத்தரப் பிரதேசம் இன்று நல்லாட்சிக்கு பெயர் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார் . இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உத்தர பிரதேசம் வழிநடத்தி செல்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மாநாட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழும தலைவர் சந்திரசேகரன், ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார மங்கலம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, உத்தரப்பிரதேசத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும் இதன் மூலம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தரப்பிரதேசத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் ஜியோ 5ஜி சேவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
அதிவேக 5ஜி இணையச் சேவையினால் உலகளவில் இந்தியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைகின்றனர் என்றும் இந்திய இளைஞர்கள் தொழில் முயற்சி, ஆற்றல், திறமை போன்றவற்றில் உலகையே ஆளுவதாகவும் கூறியுள்ளார். பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் பிராந்தியங்களின் ஏற்ற தாழ்வு மறைவதாகவும், அதற்கு உத்திர பிரதேசம் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும் அம்பானி கூறினார். மேலும் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளி மறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mukesh ambani