உலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி

பெர்னார்ட் அர்னால்ட்டைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பணக்காரராக உயர்ந்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

உலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
  • Share this:
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமான அளவு முதலீட்டை தனது நிறுவனத்தின் மீது பெற்றது. இந்தநிலையில் ப்ளூர்பெர்க் பெரும்பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 80.6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

இந்திய மதிப்பின்படி, அவருடைய சொத்த மதிப்பு 6.04 லட்சம் கோடி ரூபாயாகும். அதன்மூலம், எல்.வி.எம்.எஃச் மொய்ட் ஹென்செஸ்ஸி லூயிஸ் வியூட்டன் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்களில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அர்னால்டின் மொத்த சொத்து மதிப்பு 1.24 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 80.2 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இந்திய மதிப்பில் அவரின் சொத்த மதிப்பு 60.01 லட்சம் கோடியாக உள்ளது. அவர், தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளார். ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் 8 பேர் அமெரிக்கர்கள் ஆவர். இந்தியா மற்றும் ஆசியக் கண்டத்திலிருந்து அந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒருவர் முகேஷ் அம்பானி மட்டுமே.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading