உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பலவேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ''இந்தியா வெற்றிகரமான பொருளாதாரத்தின் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 50,000 கோடியை ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது. மேலும் அடுத்த 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஜியோ மூலம் ‘ஜியோ ஸ்கூல்’ மற்றும் ‘ஜியோ ஏஐ’ உள்ளிட்ட இரண்டு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். அது மாணவர் நலனிலும் மருத்துவ நலனிலும் குறைந்த விலையில் சிறிய கிராமங்களிலும், நகரங்களிலும் கொண்டுவரப்படும். தொடர்ந்து எரிசக்தியில் புதிதாக தொழில் தொடங்க உள்ளதாகவும் பயோ-கேஸ் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், விவசாயிகளும் நிறைய பயனடைவார்கள் என்றும், 'எங்கள் விவசாயிகள் உணவு வழங்குபவர்கள் மட்டுமல்ல, ஆற்றல் வழங்குபவர்களாகவும் மாறுவார்கள்' என்றும் கூறினார்.
நாம் ஒன்றாக பயணித்தால் உத்தரபிரதேசத்தை இந்தியாவின் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக 1 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட சிறந்த மாநிலமாக அடுத்த 5 ஆண்டிற்குள் மாற்ற முடியும் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Reliance