முகப்பு /செய்தி /இந்தியா / முகலாயர் தோட்டம் அல்ல.. இனி அம்ரித் உத்யான்.. மாற்றப்பட்ட பெயர்..!

முகலாயர் தோட்டம் அல்ல.. இனி அம்ரித் உத்யான்.. மாற்றப்பட்ட பெயர்..!

அம்ரித் உத்யான்

அம்ரித் உத்யான்

மலர்த்தோட்டம் ஜனவரி இறுதி முதல் மார்ச் மாதம் வாரம் பொதுமக்கள் கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் முகலாய தோட்டம் அமைந்துள்ளது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மலர் வகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் போது, இந்த மலர்த்தோட்டம் ஜனவரி இறுதி முதல் மார்ச் மாதம் வாரம் பொதுமக்கள் கண்டு ரசிக்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

பாபர் காலம் தொடங்கி ஆண்டாண்டு காலமாக "முகலாயர் தோட்டம்" என அழைக்கப்பட்டு வந்த ஜனாதிபதி மாளிகையின் மலர்த்தோட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, இந்தியாவின் 75 ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில் அமிருத பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் கீழ், முகலாயர் தோட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு "அம்ரித் உத்யான்" என அழைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை, பொதுமக்கள் பார்வைக்காக மலர்த்தோட்டம் திறக்கப்பட உள்ளது. காலை 9 முதல் மாலை 4 மணி வரை சென்று பார்வையிடலாம்.

First published:

Tags: President