Home /News /national /

மவுலிவாக்கம் முதல் நொய்டா வரை.. தரை மட்டமான பிரமாண்ட கட்டிடங்கள்

மவுலிவாக்கம் முதல் நொய்டா வரை.. தரை மட்டமான பிரமாண்ட கட்டிடங்கள்

கட்டடம் இடிப்பு

கட்டடம் இடிப்பு

Noida Twin Tower demolish: சென்னை அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28ம் தேதியன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Noida, India
    நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த பிரமாண்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் இன்று அருவி உள்வெடிப்பு முறையில் தகர்க்கப்பட்டது. இந்நிலையில், இது போன்ற இதற்கு முன்பு எங்கெல்லாம் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன என்பது குறித்து பார்ப்போம்.

    சென்னை போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28 ந் தேதியன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம். விபத்து நிகழ்ந்த இடத்தை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

    விபத்து தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, அருகில் இருந்த மற்றொரு கட்டிடமும் பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதையும் இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2016 நவம்பர் மாதம் மற்றொரு கட்டிடமும் வெடி வெடித்து தகர்க்கப்பட்டது.

    மவுலிவாக்கம் கட்டடம் தகர்ப்பு


    இதேபோல், கேரள மாநிலம் கொச்சி அருகே மரடு பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தன. கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி இக்கட்டங்கள் கட்டப்பட்டிருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு, 4 கட்டிடங்களையும் இடிக்க உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: நொடிகளில் தரைமட்டமான நொய்டா பிரமாண்ட இரட்டை கோபுரங்கள்.. அருவி உள்வெடிப்பு முறையில் தகர்க்கப்பட்டது

    அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 கட்டடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.  இதற்காக அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கட்டிடங்களுக்கு அருகே 200 மீட்டர் சுற்றளவில் வசித்து வந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவில் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

     

    கேரளா கட்டடம் தகர்ப்பு


    தற்போது, அந்த வரிசையில், நொய்டாவில்  விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டுள்ளது. எனினும், முந்தைய இரண்டு கட்டடங்களை விட தற்போது தகர்ப்பட்டது, உயரத்தில் பெரியது ஆகும். இதனை தகர்க்க மட்டும் 3,700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார், 55 ஆயிரம் டன் கட்டிட கழிவுகள் அப்பகுதியில் குவிந்துள்ளது. இதனை  3,000 லாரிகளில் அகற்றுவதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Kerala, Noida Twin Tower

    அடுத்த செய்தி