முகப்பு /செய்தி /இந்தியா / முப்தி முகமது சயித்தின் பாரம்பரிய வீட்டை விற்பனை செய்யும் குடும்பத்தினர்!

முப்தி முகமது சயித்தின் பாரம்பரிய வீட்டை விற்பனை செய்யும் குடும்பத்தினர்!

முஃப்தி சயித்

முஃப்தி சயித்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

  • Last Updated :

காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் முப்தி முகமது சயித்தின் பாரம்பரிய வீட்டை விற்பதற்கு முடிவு செய்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தெற்கு காஷ்மீர் பகுதியில், பிஜெப்ஹரா பகுதியிலுள்ள முப்தி முகமது சயித்தின் பாரம்பரிய வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட ஒரு மாதம் ஆன நிலையில், அந்த வீட்டில் வசித்துவரும் முப்தி முகமது சயித்தின் இளைய சகோதரர் முப்தி முகமது அமின் அந்த வீட்டை விற்பதற்கு முடிவு செய்துள்ளார் என்று இந்துவில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தி இந்துவுக்கு பேட்டியளித்த முப்தி முகமது குடும்பத்தினர், ’காவல்துறை பாதுகாப்பை திரும்பப் பெற்றது குடும்பத்தினருக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய வீடுகள் தீவிரவாதிகளால் முன் காலத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. 1990-களில் தீவிரவாதிகள் உருவாகத் தொடங்கிய காலத்தில் இந்த இரட்டை வீடுகளுக்கு கடுமையான பாதுகாப்புகள் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. மெஹ்பூபா முஃப்தியின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது.

அதனால், வேறு வழியில்லை. அதனால், வீட்டை விற்பதற்கு முடிவு செய்துவிட்டோம். இந்த குடும்பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஜம்முவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.

1950-களில் முப்தி முகமது சயித் இந்த வீட்டில் இருந்துதான் அவருடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1989-ம் ஆண்டு வி.பி.சிங் அரசின்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.

Also see:

top videos

    First published:

    Tags: Kashmir