உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ஜெயமங்கள் கனோஜியா மேல் சேறு ஊற்றி பழங்கால சடங்கை அவ்வூர் பெண்கள் நடத்தினார்கள்.
அம்மாநிலத்தில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பிபார்டியுர என்னும் இடத்தில் மழை பெய்ய வேண்டி கடவுள் இந்திரனுக்கு ஊர் பெண்கள் இணைத்து பழங்கால சடங்கான சேற்றுக் குளியலை நிகழ்த்தினார்கள்.
இந்திரனிடம் ஊர் வளம் செழிக்க வேண்டி, இந்த வழக்கத்தின் படி ஊர்த் தலைவர்கள் மேல் சேறு ஊற்றிக் குளிக்க வைப்பார்கள். அப்படி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஜெயமங்கள் கனோஜியா மற்றும் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண கோபால் ஜெய்ஸ்வால் மேல் ஊர் பெண்கள் பாடல் பாடி சேற்றை ஊற்றி சடங்கை நடத்தினர். இந்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
#WATCH | Women in Pipardeura area of Maharajganj in Uttar Pradesh throw mud at MLA believing this will bring a good spell of rainfall for the season pic.twitter.com/BMFLHDgYxb
கோடைக்கால முடிவின் பின் மழைக் காலம் தொடங்கியுள்ளது. இப்படி செய்து இந்திரனிடம் வேண்டினால் விவசாயத்திற்குத் தேவையான மழை பெய்யும் எனவும் ஊர் வளம் பெருகி அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம் என்பதும் அந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனை பற்றி பா.ஜ.க சட்டமற்ற உறுப்பினரான ஜெயமங்கள் கனோஜியா கூறுகையில்,வெயிலின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊர் பெண்கள் பழங்கால வழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளனர் என்றார்.
மேலும் கிருஷ்ண கோபால் ஜெய்ஸ்வால், வறட்சியைத் தடுக்க இந்த சடங்கு நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்.ஊர் மக்களுக்காக மழை வர வேண்டி இந்த சடங்கை ஏற்பது மகிழ்ச்சியளிப்பதாக இருவரும் தெரிவித்திருந்தனர்.
Published by:Saravana Siddharth
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.