பா.ஜ.கவில் இணைவதற்கு தோனி பேச்சுவார்த்தை நடத்துகிறார்! முன்னாள் அமைச்சர் விளக்கம்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோனி, பா.ஜ.கவில் இணைவார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

news18
Updated: July 13, 2019, 9:17 PM IST
பா.ஜ.கவில் இணைவதற்கு தோனி பேச்சுவார்த்தை நடத்துகிறார்! முன்னாள் அமைச்சர் விளக்கம்
மகேந்திர சிங் தோனி
news18
Updated: July 13, 2019, 9:17 PM IST
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோனி பா.ஜ.கவில் இணைவார் என்று மூத்த பா.ஜ.க தலைவர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, தோல்வியடைந்த நிலையில், தோனியின் எப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.

சஞ்சய் பஸ்வான்


நீண்ட நாள்களாகவே இந்த கேள்வி இருந்து வந்தாலும், தற்போது அந்த கேள்வி அதிகமாக எழுகிறது. மறுபுறம், தோனியின் தீவிர ரசிகர்கள் தோனி இன்னும் கிரிக்கெட்டில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோனி, பா.ஜ.கவில் இணைவார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘தோனி, உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர். அவர் பா.ஜ.கவுடன் இணைவதற்க முயற்சி செய்துவருகிறார். அதுதொடர்பான பேச்சுவார்த்தையில் தோனி நீண்ட நாள்களாக ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான், அவர் பா.ஜ.கவில் இணைவது குறித்து முடிவெடுப்பார்’ என்று தெரிவித்தார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:
Loading...
First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...