Home /News /national /

ரூ.40 கட்டணத்தில் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி

ரூ.40 கட்டணத்தில் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி

ஆயுர்வேத சிகிச்சை பெறும் எம்எஸ் தோனி

ஆயுர்வேத சிகிச்சை பெறும் எம்எஸ் தோனி

தோனியின் பெற்றோரும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று நல்ல பலனை கண்டுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது கால் மூட்டு பிரச்சனைக்காக உள்ளூர் ஆயுர்வேதா மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அத்துடன் இந்த சிகிச்சைக்காக அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் தோனி செலுத்திய கட்டணம் ரூ.40 மட்டுமே.

    தனது அதிரடியான பேட்டிங் மற்றும் நிதானம் இழக்காத தன்மை ஆகியவை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இந்திய  முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும் தோனி, அங்கிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான லாபுங் என்ற கிராமப் பகுதியில் வசிக்கும் வந்தன் சிங் கேர்வார் என்ற ஆயுர்வேத மருத்துவரிடம் தனது மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

    எம்எஸ் தோனிக்கு கால்சியம் குறைபாடு காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆயுர்வேத மருத்துவ முறையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுவருகிறது. தோனியின் பெற்றோரும் இந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்று நல்ல பலனை கண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே கடந்த ஒரு மாதமாக இந்த மருத்துவரிடம் தோனி சிகிச்சை பெறுகிறார்.

    தோனிக்கு சிகிச்சை தரும் ஆயுர்வேத மருத்துவர்(நன்றி-ட்விட்டர்)


    நான்கு நாள்களுக்கு ஒரு முறை இந்த மருத்துவரிடம் வந்து செல்லும் தோனி ஆலோசனை கட்டணமாக ரூ.20, மருந்துகளுக்கு ரூ.20 என மொத்தம் ரூ.40 மட்டுமே தந்து வருகிறார். எந்த பரபரப்புகளும், பில்டப்புகளும் இன்றி சாதாரணமாக இந்த மருத்துவரிடம் தோனி வந்து செல்கிறாராம். தோனி முதல் முதலாக வந்து சென்ற போது அந்த மருத்துவருக்கு தோனியை அடையாளம் தெரியவில்லையாம். அந்த பகுதியில் தேவையற்ற கூட்டத்தை உருவாக்க வேண்டாம் என்பதால் பெரும்பாலும் காருக்குள் அமர்ந்தே ஆலோசனை பெற்று மருந்துகளை வாங்கிக்கொள்ளும் தோனி, அருகே வந்த பார்க்கும் சில ரசிகர்களிடம் மட்டும் செல்பி எடுத்துக்கொள்கிறாராம்.

    இதையும் படிங்க: ஒரு கப் டீ ரூ.70, சர்வீஸ் சார்ஜ் மட்டும் ரூ.50 - பில்லை பார்த்து அதிர்ச்சியடைந்த ரயில் பயணி

    பொதுவாக வசதி படைத்த பிரபலங்கள் பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெறுவதே வாடிக்கை. ஆனால், எம்எஸ் தோனி உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் ரூ.40 மட்டுமே செலவு செய்து தனக்கு சிகிச்சை செய்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Ayurvedic doctors, Ayurvedic medicine, Jharkhand, MS Dhoni

    அடுத்த செய்தி