முகப்பு /செய்தி /இந்தியா / KGF 2 பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி மீது வழக்கு

KGF 2 பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி மீது வழக்கு

ராகுல் காந்தி மீது மியூசிக் நிறுவனம் காப்புரிமை வழக்கு பதிவு

ராகுல் காந்தி மீது மியூசிக் நிறுவனம் காப்புரிமை வழக்கு பதிவு

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நடைபயணத்தின் போது கேஜிஎப் - 2 திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் இசையை தனது வீடியோ ப்ரோமேஷன்களுக்கு அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளார் என வழக்கு தொடுத்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைப்பயணத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில், தற்போது தெலங்கானா மாநிலத்தில் நான்கு நாள்களாக நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மாதம் ராகுல் காந்தி கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில்,இந்த நடைப்பயணத்தின் போது யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கேஜிஎப் - 2 திரைப்படத்தின் பாடல்கள், இசையை தனது வீடியோ ப்ரோமேஷன்களுக்கு அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளார் என புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த எம்ஆர்டி மியூசிக் என்ற நிறுவனம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோர் மீது காப்புரிமை மீறல் புகாரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி என்னை பாராட்டவில்லை, உண்மையைத்தான் சொன்னார் - அசோக் கெலாட் கருத்து

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  " பெரும் தொகையை முதலீடு செய்து நாங்கள் கேஜிஎப் 2 பாடல் காப்புரிமையை பெற்றுள்ளோம். அதை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று.

காப்புரிமை பாதுகாப்பு உறுதி செய்வதை விட்டுவிட்டு,காங்கிரஸ் கட்சி இவ்வாறு பாடலை பயன்படுத்தி நாட்டின் குடிமக்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகிறது. எனவே, இந்த அத்துமீறலை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். இது எங்கள் உரிமையை பெறும் நடவடிக்கையே தவிர அரசியல் கட்சியின் பிம்பத்தை சேதம் செய்யும் உள்நோக்கம் ஏதும் இல்லை" என தெரிவித்துள்ளது.

First published:

Tags: Karnataka, KGF 2, Rahul gandhi