இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்றவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட்

ஜெதீஷ் லாட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்கல பதக்கமும், மிஸ்டர் இந்தியா போட்டியில் இரண்டு முறை தங்க பதக்கமும் வென்றுள்ளார்.

 • Share this:
  இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  மகாராஷ்டிராவை பூர்விகமாக கொண்டவர் பாடி பில்டர் ஜெகதீஷ் லாட் (34). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து வடோதாராவுக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு அவர் சொந்தமாக ஓர் உடற்பயிற்சி கூடத்தையும் தொடங்கி நடத்தி வந்தார்.

  ஜெதீஷ் லாட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்கல பதக்கமும், மிஸ்டர் இந்தியா போட்டியில் இரண்டு முறை தங்க பதக்கமும் வென்றுள்ளார். மேலும் இந்தியாவின் சார்பில் பல சர்வேதச போட்டிகளில் ஜெகதீஷ் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்து வந்தார்.

  இதனிடையே, அண்மையில் ஜெகதீஷ் லாட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அவர் கடந்த 4 நாட்களாக குஜராத், வடோதரா மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: