கோதுமை மாவை பிசைந்து குழந்தை போல கொண்டு வந்த பெண்! கிறுகிறுத்துப்போன டாக்டர்

மூன்று பெண்களும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கியதால், அவர்களின் ஏழ்மை நிலை கருதி போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

news18
Updated: August 24, 2019, 3:25 PM IST
கோதுமை மாவை பிசைந்து குழந்தை போல கொண்டு வந்த பெண்! கிறுகிறுத்துப்போன டாக்டர்
குழந்தை போல உருட்டப்பட்ட கோதுமை மாவு
news18
Updated: August 24, 2019, 3:25 PM IST
பிரசவமான பெண்களுக்கு மாநில அரசு வழங்கும் உதவித்தொகையை பெறுவதற்காக, கோதுமை மாவை பிசைந்து, உருட்டி பச்சிளம் குழந்தை போல துணியால் சுற்றிக்கொண்டு பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் மொரேனா பகுதியில் உள்ள கைலாராஸ் அரசு மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மூன்று பெண்கள் ஆம்புலன்சில் வந்துள்ளனர். அதில், ஒரு பெண் துணியால் சுற்றப்பட்ட குழந்தையுடன் உள்ளே வந்து, பிரசவத்திற்கு அரசு வழங்கும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முயன்றுள்ளனர்.

மருத்துவமனையின் உள்ளே செவிலியர் ஒருவர் குழந்தையை காட்டுமாறு கூற, குழந்தை இறந்தே பிறந்ததாக அந்தப் பெண் பதிலளித்துள்ளார். தொடர்ந்து குழந்தையை காட்ட மறுக்கவே மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். ஒரு வழியாக மருத்துவர்கள், செவிலியர்கள் போராடி பெண்ணிடம் இருந்து குழந்தையை பிரிக்க முயன்றனர்.


அப்போது குழந்தை திடீரென கீழே விழுந்தது. குழந்தை கீழே விழுந்துவிட்டது என்று அனைவரும் அதிர்ச்சியடைய, அவர்களுக்கு அதற்க்கும் மேலாக ஒரு அதிர்ச்சி கிடைத்துள்ளது. கீழே விழுந்தது குழந்தையே அல்ல.. கோதுமை மாவை பிசைந்து, பச்சிளம் குழந்தை போல உருட்டி, அதற்கு வண்ணம் அடித்து வெளியே தெரியாதவாறு துணியால் சுற்றிக்கொண்டு மூன்று பெண்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

பிரசவிக்கும் பெண்களுக்கு அம்மாநில அரசு ரூ.16 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்குகிறது. இந்த நிதியைப் பெறுவதற்கு திட்டமிட்ட பெண்கள் கோதுமை மாவை பச்சிளம் குழந்தைபோல உருட்டி மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர். கையும் களவுமாக பிடிபட்டதை அடுத்து, போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

மூன்று பெண்களும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கியதால், அவர்களின் ஏழ்மை நிலை கருதி போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...