முதலமைச்சர் அவர்களே! சென்னையைக் காப்பாற்றுங்கள் - ரவிக்குமார் எம்.பி

ரவிக்குமார், எம்.பி.

சென்னையை சிறப்பு நடவடிக்கை எடுத்து காப்பாற்ற வேண்டும் என விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் எம்,பி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  சென்னையை சிறப்பு நடவடிக்கை எடுத்து காப்பாற்ற வேண்டும் என விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் எம்,பி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

  சென்னையைக் காப்பாற்ற சிறப்பு நடவடிக்கை வேண்டும்.அதிகாரிகள் மாறி மாறி அறிக்கை விட்டு மக்களின் உயிரோடு விளையாடவேண்டாம்.அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கிறார்கள் என செய்திகள் வந்தும் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

  மேலும் கொரோனா சிகிச்சை தேவையாக இருக்கும் வரை தனியார் மருத்துவமனைகள் அரசே கையகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  Published by:Gunavathy
  First published: