• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ம.பி.யில் 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா... பாஜகவில் இணையும் சிந்தியா...!

ம.பி.யில் 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா... பாஜகவில் இணையும் சிந்தியா...!

சிந்தியா | கமல்நாத்

சிந்தியா | கமல்நாத்

  • News18
  • Last Updated :
  • Share this:
    காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவரான சிந்தியா விலகியுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் 20 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கியதால் அரசியல் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், கமல்நாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏக்களை நேற்று மாலை முதல் தொடர்பு கொள்ள முடியாததால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    ஆட்சியை தாக்க வைப்பதற்காக முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் 16 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்காக அமைச்சர்கள் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை ஜோதிராதித்ய சிந்தியா சந்தித்து பேசினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார். இதற்கிடையே, 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டமும் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

    ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு மாநிலங்களவை பதவி வழங்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதில், ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தில் 3 மாநிலங்களவை பதவிக்கு இம்மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், பாஜக, காங்கிரஸுக்கு ஒரு இடம் உறுதியாகி உள்ளது. 3-வது இடத்திற்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அந்த பதவியை பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: