போலீஸ்காரர் டிராபிக் ரூல்ஸ் மீறின டெலிவரி பாய்க்கு பைன் போட்டு பார்த்திருப்பீங்க. ஆனால் பைக் வாங்கி கொடுத்து பார்த்திருக்கீங்களா?. இந்த நெகிழ்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
ஸ்விக்கி, ஜொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் ஏஜெண்ட்கள் நிலை மிகவும் பரிதாபம். எதற்கு எடுத்தாலும் அவசரம் தான், உணவு டெலிவரி நிறுவனங்கள் போட்டி, போட்டுக் கொண்டு டெலிவரி நேரத்தை குறைப்பதால் அதனை டெலிவரி செய்யும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஓவர் டெலிவரி டார்கெட், குறைவான சம்பளம், ஊக்கத்தொகை, பெட்ரோல் விலையேற்றம், பணி நிரந்தரம் கிடையாது போன்ற பல்வேறு பிரச்சனைகளோடு, கொளுத்தும் கோடை வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது.
இந்த கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வந்த இளைஞருக்கு காவல்துறையினர் பைக் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் 22 வயதான ஜே ஹல்டே என்ற இளைஞர் ஜொமேட்டோவில் சைக்கிள் மூலம் உணவு டெலிவரி செய்து வருகிறார். கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வரும் அந்த இளைஞரை விஜய நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தெஹ்சீப் குவாசி என்ற காவல் அதிகாரி பல நாட்களாக கண்காணித்து வந்துள்ளார்.
கொரோனா சமயத்தில் பலரது பொருளாதார நிலையும் தலைகீழாக மாறிவிட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும் ஜே ஹல்டேவின் கதை என்ன என்பதை அறிந்து கொள்ள காவல் அதிகாரி ஆர்வம் காட்டினார். இதுகுறித்து இளைஞரிடமே விசாரித்த போது, குடும்ப கஷ்டத்தை போக்க ஜொமேட்டோவில் உணவு டெலிவரி செய்து வருவதும், பைக் வாங்க காசு இல்லாததால், சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்ப கஷ்டத்திற்காக தினமும் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வரும் ஜே ஹல்டேவுக்கு உதவ காவல் அதிகாரி தெஹ்சீப் குவாசி முடிவெடுத்தார். அதன் படி, சக காவல்துறையினரை ஒன்றிணைந்து தன்னால் இயன்ற பணத்தை திரட்டி முன் பணம் செலுத்தி ஜேவிற்கு இரு சக்கர வாகனத்தை வாங்கி தந்துள்ளனர். முன்பணம் மற்றும் முதல் தவணைத் தொகை ஆகியவை சேர்த்து 32 ஆயிரம் ரூபாய் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தவணைத் தொகையை தானே திரும்ப செலுத்த உள்ளதாக ஜே ஹல்டே தெரிவித்துள்ளார்.
ALSO READ | பல மாதத்திற்கு பின் வீடு திரும்பிய ராணுவ வீரர்... குழந்தையை சந்திக்கும் உணர்ச்சிப் பூர்வமான வைரல் வீடியோ!
இதுகுறித்து காவல்துறையினருக்கு தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ள இளைஞர் கூறுகையில், "முன்பு, நான் எனது சைக்கிளில் ஆறு முதல் எட்டு பார்சல் உணவுகளை டெலிவரி செய்து வந்தேன். ஆனால் இப்போது என்னால் மாலையில் 15-20 உணவுப் பார்சல்களை டெலிவரி செய்ய முடிகிறது” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madhya pradesh, Trending