Home /News /national /

ம.பி உள்ளாட்சித் தேர்தல்..முதலிடத்தில் பாஜக, முன்னேறிய காங்கிரஸ், என்ட்ரி கொடுத்த ஆம் ஆத்மி

ம.பி உள்ளாட்சித் தேர்தல்..முதலிடத்தில் பாஜக, முன்னேறிய காங்கிரஸ், என்ட்ரி கொடுத்த ஆம் ஆத்மி

மத்திய பிரதேசத்தில் என்ட்ரி கொடுத்த ஆம் ஆத்மி

மத்திய பிரதேசத்தில் என்ட்ரி கொடுத்த ஆம் ஆத்மி

MP Panchayat results- மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 6, 13 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முடிவு அறிவிக்கப்பட்ட 11 முனிசிபல் கார்ப்பரேஷன்களில் 5 இடங்களில் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. சிந்தவாராவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், குவாலியர், ஜபல்பூர் ஆகிய கார்ப்பரேஷன்களிலும் கணிசமான இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது.

    தான் களமிறங்கிய முதல் உள்ளாட்சி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தனது தடத்தை பதித்துள்ளது. சிங்க்ரவுலி கார்ப்பரேஷனில் மேயர் பதவியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராணி அகர்வால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 9,352 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளனர். தனது ட்விட்டர் பதிவில் மத்தியப் பிரதேச பாஜகவை வாழ்த்திய பிரதமர் மோடி, சிவராஜ் சிங் சவுஹான் அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி இது எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆளும் பாஜக அரசின் பணம், அதிகார பலத்தை மீறி குவாலியர், ஜபல்பூர் போன்ற பகுதிகளில் காங்கிரஸ் தனது கொடியை உயர பறக்கவிட்டுள்ளது என பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரியால் அரிசி, பால், தயிர் போன்ற பொருள்கள் இன்று முதல் விலை உயர்வு!

    சிங்க்ரவுலி மேயராக தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ராணி அகர்வாலுக்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மூளைகளிலும் ஆம் ஆத்மியின் நேர்மையான அரசியலுக்கு வரவேற்பு உள்ளது என கெஜ்ரிவால் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 20ஆம் தேதி நடைபெற்று முடிவுகள்  வெளியாகவுள்ளன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Aam Aadmi Party, BJP, Congress, Madhya pradesh, Madhya Pradesh election

    அடுத்த செய்தி