ஹோம் /நியூஸ் /இந்தியா /

முதலமைச்சர் வீட்டின் முன் அனுமன் சாலிசா பாட திட்டம் - எம்.பி நவநீத் ராணா கணவருடன் கைது

முதலமைச்சர் வீட்டின் முன் அனுமன் சாலிசா பாட திட்டம் - எம்.பி நவநீத் ராணா கணவருடன் கைது

முதலமைச்சர் உத்தவ் தாக்ரே வீட்டின் முன் அனுமன் சாலிசா பாடப்போவதாக அறிவித்த மகாரஷ்ரடிரா எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

முதலமைச்சர் உத்தவ் தாக்ரே வீட்டின் முன் அனுமன் சாலிசா பாடப்போவதாக அறிவித்த மகாரஷ்ரடிரா எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

முதலமைச்சர் உத்தவ் தாக்ரே வீட்டின் முன் அனுமன் சாலிசா பாடப்போவதாக அறிவித்த மகாரஷ்ரடிரா எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி எம்பி நவ்நீத் ராணா. பிரபல நடிகையான இவர் அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது கணவர் ரவி ராணா பத்னேரா சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். இருவரும் சுயேட்சை உறுப்பினராக உள்ள நிலையில், மகாராஷ்டிராவை ஆளும் சிவ சேனா கட்சியுடன் மோதல் போக்கில் இருந்து வருகின்றனர்.

  குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் தனது பிரச்னையில் இருந்து விடுபட முதலமைச்சரும் சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்ரே அனுமன் சாலிசா பாடலை படிக்க வேண்டும் என எம்எல்ஏ ராணா கோரிக்கை வைத்திருந்தார். இதை முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ஏற்காத நிலையில், முதலமைச்சரின் இல்லமான மும்பையில் உள்ள மத்தோஸ்ரீ முன்பாக எம்எல்ஏ ராணாவும் அவரது மனைவியான எம்பி நவ்நீத்தும் இன்று அனுமன் சாலிசா பாடப்போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு மகாராஷ்டிராவில் பரபரப்பை கிளப்பியது.

  இவர்களின் ஆதரவாளர்கள் சிலர் இன்று காலை முதலமைச்சர் உத்தவ் தாக்ரே வீட்டின் முன் திரண்டு அனுமன் சாலிசா பாடத் தொடங்கிய நிலையில், அவர்கள் காவல்துறையினர் மற்றும் சிவ சேனா தொண்டர்களால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

  இதையும் படிங்க: பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடாதீர்கள் - டிவி சேனல்களுக்கு அரசு அறிவுறுத்தல்

  அதேவேளை, இன்று அதிகாலையே ராணா தம்பதியினர் வீட்டின் முன் சிவ சேனா தொண்டர்கள் திரண்டு அவர்களை வெளியேற முடியாத படி வீட்டை முற்றுகையிட்டனர். பேரிக்கேடுகளை அகற்றி சிவ சேனா தொண்டர்கள் வீட்டிற்குள் நுழைய முயற்சித்த நிலையில், அவர்களை காவல்துறை கட்டுப்படுத்தியது.

  பின்னர் காவல்துறை தலையீட்டால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ ரவி ராணா, "எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னவிஸ் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மறைந்த லதா மங்கேஷ்கரின் விருது பெற பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா வரவுள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்க வேண்டும். எனவே, அசம்பாவிதம் எதுவும் நடைபெற வேண்டாம் என பட்னாவிஸ் என்னை கேட்டுக்கொண்டார். இதையடுத்து முதலமைச்சர் வீட்டின் முன் பாடும் எங்கள் முடிவை நாங்கள் கைவிடுகிறோம்" என்றார்.

  இந்நிலையில், ரவி ராணா மற்றும் அவரது மனைவியை மகாராஷ்டிரா காவல்துறை இன்று மாலை அவர்களது இல்லத்தில் கைது செய்துள்ளது. இருவர் மீது மதங்களுக்கு இடையே பகையை உருவாக்கி அமைதியை குலைக்கும் நோக்கில் செயல்படுவதாக சட்டப் பிரிவு 153 ஏ இன் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Maharastra