கேரளாவுக்குப் போய் மீன் பிடிக்க வேண்டியது, பிறகு ஈவிஎம் மிஷினை குறை கூறுவது: ராகுல் மீது பாஜக கடும் தாக்கு

கேரளாவுக்குப் போய் மீன் பிடிக்க வேண்டியது, பிறகு ஈவிஎம் மிஷினை குறை கூறுவது: ராகுல் மீது பாஜக கடும் தாக்கு

ராகுல் காந்தி.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென ராகுல் காந்தி சட்டென்று கடலில் குதித்து நீச்சலடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராகுல்காந்தி திடீரென்று கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

 • Share this:
  கேரளாவில் அரபிக்கடலில் மீனவர்களுடன் கடலில் நீச்சல் அடித்த ராகுல் காந்தியை மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கடுமையாகக் கிண்டல் செய்தார்.

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி, கடலில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.

  கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கூறினார். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

  அதன்பின்னர், ராகுல்காந்தி இன்று கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் பயணம் செய்து வலை வீசி மீன் பிடித்தார். அந்த மீன்களை படகில் வைத்து மீனவர்கள் சமைத்துக் கொடுத்தனர்.

  கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென ராகுல் காந்தி சட்டென்று கடலில் குதித்து நீச்சலடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராகுல்காந்தி திடீரென்று கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

  இந்நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “வித்தியாசத்தை கவனியுங்கள்! மோடிஜி தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார், அமித்ஷா ஜி மேர்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார். நட்டாஜி அசாமில் பிரச்சாரம் செய்கிறார். ராஜ்நாத் சிங் கேரளாவில் இருக்கிறார், ஆனால் பப்புவைப் பாருங்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

  பிறகு ஈவிஎம் எந்திரத்தில் கோளாறு என்பார்கள்” என்று கிண்டல் செய்துள்ளார்.

  ஆனால் ராகுல் காந்தி எளிமையாகப் பழகியதாக மீனவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: