• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெண் குழந்தையை வரவேற்க தங்கைக்கு வித்தியாசமான பரிசளித்த அண்ணன்!

பெண் குழந்தையை வரவேற்க தங்கைக்கு வித்தியாசமான பரிசளித்த அண்ணன்!

தங்கைக்கு வித்தியாசமான பரிசளித்த அண்ணன்

தங்கைக்கு வித்தியாசமான பரிசளித்த அண்ணன்

மாற்றுத்திறனாளியான தன்னுடைய தங்கைக்காக இதை பரிசாக அளித்ததாக மனநிறைவுடன் தீபக் கூறுகிறார்.

  • Share this:
பெண் குழந்தைகள் பிறப்பை பலரும் கொண்டாட்டமாகக் கருதுவது சமீபத்தில் நிகழ்ந்த மாற்றங்களில் மிகவும் பாராட்டுக்குரியது. அது மட்டுமின்றி, பெண் தெய்வங்களை வழிபடும், இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையான நவராத்திரி, நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நபர், தன் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை மிகச் சிறந்த முறையில் கொண்டாடி இருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் பங்க் திறந்ததில் இருந்தே, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்றி செலுத்த வேண்டும் என்பது மத்திய பிரதேசத்தை சேர்ந்த தீபக்கின் ஆசையாக இருந்தது. நவராத்திரி கொண்டாட்டத்தில் நாடே ஈடுபட்டிருக்கும் போது, அதை நிறைவேற்ற சரியான தருணம் அவருக்குக் கிடைத்தது.

மத்திய பிரதேசத்தில் உள்ள பேட்டூல் மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் பங்க் நடித்தி வருகிறார் தீபக் சைனானி. தீபக்கின் தங்கை, சிகா போர்வாலுக்கு அக்டோபர் 9 அன்று அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தன்னுடைய குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை, அனைவருக்கும் இலவசமாக பெட்ரோல் வழங்கி கொண்டாடியிருக்கிறார் தீபக்.

இலவசமாக பெட்ரோல் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்த, தீபக்கிற்கு முதலில் தயக்கமாக இருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “மிகவும் மலிவான மார்கெட்டிங் முறையில் ஈடுபடுகிறேன் யாரும் தவறாக நினைத்து விடக்கூடாது என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால், இதை செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய முடியவில்லை. இருப்பினும், இதை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்து, செயல்படுத்திவிட்டேன்’ என்று தெரிவித்தார்.

ALSO READ | நிகாங் சீக்கிய குழுவின் பரபரக்கும் பின்னணி! விவசாயிகள் போராட்ட களத்தில் கொடூர கொலைக்கான காரணம் என்ன?

அக்டோபர் 13, 14, மற்றும் 15 ஆகிய தேதிகளில், அஷ்டமி, நவமி மற்றும் நவராத்திரியின் இறுதி நாளான தசமி ஆகியவை கொண்டாடப்பட்டது. இந்த நாட்களில், கூடுதலாக 5 முதல் 10 சதவிகிதம் வரை இலவசமாக பெட்ரோல் வழங்கலாம் என்ற திட்டத்தை வகுத்தார் தீபக். இந்த சலுகையை மக்களுக்கு அறிவிக்கும் வகையில், ஒரு அறிவிப்புப் பலகையையும் வைத்திருந்தார்.

தீபக் வழங்கிய இலவச பெட்ரோல் சலுகையைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு. ரூ. 100 க்கு பெட்ரோல் வாங்கியவர்களுக்கு 5 சதவிகிதம் கூடுதலாகவும், ரூ. 200-500 க்கு பெட்ரோல் வாங்கியவர்களுக்கு, வாங்கிய தொகைக்கு ஏற்ப 10 சதவிகிதம் கூடுதலாகவும் அளித்தார்.

இந்த சலுகையை பரபரப்பான நேரத்தில் அளிக்க தீபக் முடிவு செய்தார். அதிகப்படியான வாடிக்கையாளர்கள், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 5 முதல் 7 மணி வரையிலும் நிலையத்துக்கு வருவார்கள். எனவே, இந்த சலுகையை அனைவர்க்கும் பயன்படும் வகையில் அதிகமாக வாடிக்கையாளர்கள் வரும் நேரத்தில் வழங்கினேன் என்று தீபக் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியான தன்னுடைய தங்கைக்காக இதை பரிசாக அளித்ததாக மனநிறைவுடன் தீபக் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: