கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்: பாஜக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்!

கூட்டு பாலியல் வன்புணர்வு

அப்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ் சுக்லா மற்றும் 3 பேர் சேர்ந்து தன்னை காரில் கடத்திச் சென்று அருகில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள பன்னை வீட்டில் அடைத்து வைத்ததாக கூறினார்.

  • Share this:
20 வயது இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக பிரமுகர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் மாயமான நிலையில் இது தொடர்பாக அவரின் பெற்றோர் ஜெய்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகார் அளித்த மறு நாளான சனிக்கிழமையன்று (பிப் 20) மாலை அவர் வீடு திரும்பினார். வீடு திரும்பிய அப்பெண் கடும் அதிர்ச்சியில் இருந்தால் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார் அதன் பின்னர் காவல்துறையினர் வந்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அப்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ் சுக்லா மற்றும் 3 பேர் சேர்ந்து தன்னை காரில் கடத்திச் சென்று அருகில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள பன்னை வீட்டில் அடைத்து வைத்ததாக கூறினார். அங்கு அவருக்கு கட்டாயப்படுத்தி வாயில் மது ஊற்றி பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ் சுக்லா மற்றும் அவரின் நண்பர்கள் 3 பேர் இணைந்து அவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதன் பின்னர் அவர்கள் காரில் அப்பெண்ணை அவரின் வீட்டு வாசலில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண் ஜெய்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அவரை உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதனிடையே 20 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 4 பேரில் ஜெய்த்பூர் மண்டல பாஜக தலைவர் விஜய் திரிபாதியும் ஒருவர் என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவிய நிலையில் ஜெய்த்பூர் மண்டல் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விஜய் திரிபாதியை பாஜக நீக்கி உள்ளது. இது தொடர்பாக ஷாதோல் மாவட்ட பாஜக தலைவர் கமல் பிரதாப் சிங் கூறுகையில், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாஜகவில் இடமில்லை. இது போன்ற குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. எனவே ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபட்ட விஜய் திரிபாதியை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

குற்றச் செயலில் ஈடுபட்ட தலைமையாசிரியர் ராஜேஸ் சுக்லா, விஜய் திரிபாதி உள்ள்ட்ட 4 பேரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு, கடத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Arun
First published: