முறையற்ற உறவு! கொலை செய்து உடலை 500 துண்டுகளாக வெட்டி ஆசிட்டில் கரைத்த மருத்துவர்
முதலில், வீருவுக்கு மருத்துவர் தூக்க மருந்து கொடுத்துள்ளார். மயங்கி அவரை, குளியலைறைக்கு இழுத்துச் சென்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
news18
Updated: February 6, 2019, 2:30 PM IST
news18
Updated: February 6, 2019, 2:30 PM IST
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அவருடைய கார் ஓட்டுநரைக் கொலை செய்து 500 தூண்டுகளாக வெட்டி அசிட் ஊற்றி கரைத்துவிட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த எலும்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவர் சுனில் மந்திர். அவரிடம் பணியாற்றிய கார் ஓட்டுநர் வீரு. கார் ஓட்டுநர் வீருவின் மனைவிக்கும் மருத்துவர் சுனில் மந்திருக்கும் இடையில் முறையற்ற தொடர்பு இருந்துள்ளது.இந்தநிலையில், கடந்த திங்கள் கிழமை, சுனில், வீருவைக் கொலை செய்து 500 துண்டுகளா வெட்டி ஆசிட்டில் கரைக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘திங்கள்கிழமை மாலை சுனில் மந்திர், வீருவைக் கொலை செய்துள்ளார். முதலில், வீருவுக்கு மருத்துவர் தூக்க மருந்து கொடுத்துள்ளார். மயங்கி அவரை, குளியலைறைக்கு இழுத்துச் சென்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
அவரது, உடலை சுமார் சிறிது, சிறிதாக 500-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெடியுள்ளார். பின்னர், ஆசிட் நிரப்பிவைத்துள்ள பாத்திரத்தில் வெட்டிய உடல் பகுதிகளை போட்டுவிட்டார். துர்நாற்றம் எழுந்த நிலையில், அருகிலுள்ளவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனையடுத்து, காவல்துறையினர் மருத்துவரின் வீட்டில் சோதனை செய்தனர்.
சோதனையின்போது, ஆசிட் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் உடல் உறுப்புகள் இருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்தக் கொலையில் ஓட்டுநர் வீருவின் மனைவிக்கும் தொடர்பிருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also see:

Loading...