வாரத்திற்கு 72 மணிநேரம் வேலை - தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ள ம.பி. அரசு..!
தொழிலாளர்களின் பணிநேரத்தை நிறுவனங்களே அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கவுள்ளதாக சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
- News18 Tamil
- Last Updated: May 7, 2020, 3:40 PM IST
மத்தியப்பிரதேச மாநிலத்தில் தொழிலாளர் சட்டங்களில் சில மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
குறைந்த கட்டுப்பாடுகளுடன் உற்பத்தியை அதிகரிப்பதை அனுமதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக தொழிலாளர்களின் பணிநேரத்தை நிறுவனங்களே அதிகரித்துக் கொள்ளவும், வாரத்திற்கு 72 மணிநேரம் வரை அதிகரிக்க அனுமதி வழங்கவுள்ளதாகவும் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலையொட்டி தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பெற்ற 8 மணி நேர வேலை போன்றவை கூட அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல என்று பலர் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also see: