• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 'பசுவின் சாணம், கோமியத்தால் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்' : ம.பி. முதல்வர்

'பசுவின் சாணம், கோமியத்தால் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்' : ம.பி. முதல்வர்

2018 சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியும் பசுவை மையப்படுத்தி வாக்குறுதிகளை அளித்தது.

  • Share this:
    பசுவின் சாணம், கோமியத்தால் தனி நபர் வருமானம் உயர்வதோடு, நாட்டின் பொருளாதாரமும் வலுவடையும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

    சக்தி 2021 என்ற பெயரில் மத்திய பிரதேச தலைநகரில் பெண் கால்நடை மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது-

    நம்முடைய தனிநபர் வருமானம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பசுக்களின் சாணம் மற்றும் கோமியத்தால் வலுப்படுத்தலாம். அதற்கு திட்டமிட்ட சரியான நடவடிக்கை தேவையாக உள்ளது. இந்த இரண்டிலிருந்தும் உரம் முதல் மருந்து வரை ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மத்திய பிரதேச சுடுகாடுகளில் மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்படும் வறட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

    மத்திய பிரதேசத்தில் சிறு விவசாயிகள் மற்றும் கால்நடைகளை வளர்ப்போர் கணிசமாக உள்ளனர். அவர்கள், பசுக்களின் மூலம் அதிக லாபத்தை எப்படி பெறுவது என்பது குறித்து, கால்நடை மருத்துவர்களும், வல்லுனர்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பசுக்கள் மற்றும் காளைகளின் உதவியில்லாமல் பல வேலைகள் நடக்காது. இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துதான், கால்நடை பராமரிப்பு மையங்களை அரசு ஏற்படுத்தியள்ளது. இருப்பினும், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மையங்களை சிறப்பாக செயல்படுத்த முடியாது.
    இவ்வாறு அவர் கூறினார். பாஜக ஆளும் மத்திய அரசில் பசுக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பசு கேபினட் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தில் அரசின் 6 துறைகள் பசுக்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருகின்றன.

    2018 சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியும் பசுவை மையப்படுத்தி வாக்குறுதிகளை அளித்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பசு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், பஞ்சாயத்து வாரியாக பசுக்களின் கோமியத்தில் இருந்து வர்த்தக பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: