டிக்கெட் எடுக்கலன்னா ரூ.500... லைசென்ஸ் இல்லன்னா ரூ.5000...

சிறார்கள் விதிகளை மீறினால், வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறாரின் பாதுகாவலர் ரூ.25,000 ரூபாய் அபராதத்துடன் 3 வருட சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

டிக்கெட் எடுக்கலன்னா ரூ.500... லைசென்ஸ் இல்லன்னா ரூ.5000...
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா
  • Share this:
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவின்படி, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாலை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி, பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால், ஏற்கனவே விதிக்கப்படும் ரூ. 200 அபராதம், குறைந்தபட்சம் ரூ.500 அதிகரிக்கப்படுகிறது.


உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வாகனத்தைப் பயன்படுத்தினாலோ, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினாலோ ரூ. 5000 அபராதம் செலுத்த வேண்டும்.

உரிய தகுதிகள் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர் ரூ.10,000  அபராதம் செலுத்த நேரிடும்.

பயணிகள் வாகனத்தை அதிவேகமாக இயக்கினால், ரூ. 400 -க்கு பதிலாக ரூ.2,000 செலுத்த வேண்டும்.அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினால் ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினால் ரூ.10,000 செலுத்த வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வோருக்கான அபராதம் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ. 5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றால், ஒவ்வொரு பயணிக்கும் ரூ.1000 செலுத்த வேண்டும்.

சிறார்கள் விதிகளை மீறினால், வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறாரின் பாதுகாவலர் ரூ.25,000 ரூபாய் அபராதத்துடன் 3 வருட சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

சிறார் மீது சிறார்களுக்கான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்

Also Watch: மனைவியிடம் மன்னிப்பு கேட்ட டம்மி ரவுடி..!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading