ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் மோதிலால் வோரா?

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் மோதிலால் வோரா?

மோதிலால் வோரா

மோதிலால் வோரா

காங்கிர்ஸ் கட்சிக்கு புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு 352 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணி அரசு 91 இடங்களில் வெற்றி பெற்றது.

  இதையடுத்து மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ராகுல் காந்தி. ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்தது.

  இந்நிலையில் கட்சி தலைமை புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும், ‘ தான் ராஜினாமா செய்துவிட்டதால் தன்னால் தலைவராக தொடர்ந்து பணியாற்ற முடியாது என்றும், காலத்தை கடத்தாமல் காங்கிரஸ் காரிய கமிட்டி புதிய தலைவர் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மோதிலால் வோராவுக்கு வயது 90. 1980-ல் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மோதிலால் வோரா. மேலும் மத்திய பிரதேச முதல்வராக 2 முறையும், மத்திய அமைச்சராகவும் இருந்த மோதிலால் வோரா, உத்திர பிரதேச ஆளுநராகவும் இருந்துள்ளார்.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published:

  Tags: Congress, Rahul gandhi