• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆன்லைனில் பாடம் படிக்காத மகன் கொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட தாயின் சோக முடிவு

ஆன்லைனில் பாடம் படிக்காத மகன் கொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட தாயின் சோக முடிவு

சிறுவனுடன் தாய் சிக்கா

சிறுவனுடன் தாய் சிக்கா

சிறுவன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்தான்.

  • Share this:
    ஆன்லைனில் பாடம் படிக்காததால் 4 வயது மகனை கொன்று, தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள சாய் சித்தி அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் சாகர் பாட்டக். இவரது மனைவி 23 வயதான சிக்கா. இவர்களது மகன் 4 வயதான ரிதான். சிறுவன் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான்.

    இந்நிலையில், சிறுவன் ரிதான் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் விளையாட்டு தனமாக இருந்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த, சிறுவனின் தாய் சிக்கா அங்கிருந்த தலையணையால் சிறுவன் ரிதானின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால், சிறுவன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்தான். இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த சிக்கா தனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    Must Read : இணையத் திருடர்கள் புதிய வகையில் மோசடி - வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

    சமீபத்தில், நவிமும்பை ஐரோலியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்குக் கட்டாயப் படுத்திய தனது தாயை, அவரிதன் 15 வயது மகள் கொலை செய்த பயங்கர சம்பத்தைத் தொடர்ந்து, நாசிக்கில் ஆன்லைனில் பாடம் படிக்காத மகனை கொன்று தாய் தற்கொலை செய்திருக்கும் இந்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: