ஒடிசா : வீடியோவைப் பார்த்து அதிர்ந்த நீதிபதிகள் - குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க தாய்க்கு உத்தரவு

குழந்தை

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், குழந்தையை ஏழு நாள்களுக்குள் தந்தையிடம் ஒப்படைக்க தவறினால் காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 • Share this:
  கணவன் மற்றும் மனைவி விவாகரத்து பெற்று பிரியும் நேரத்தில் குழந்தைகளை தாயுடன் அனுப்புவதே தொடர்ந்து நிகழ்ந்து வரும் சூழலில் ஒடிசாவில் 15 மாத மகனை தந்தையுடன் அனுப்ப அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது எனலாம். குழந்தை தாயுடன் செல்ல அனுமதித்தால் குழந்தை உளவியல் மற்றும் உடல் நீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனக் கருதுவதால் இத்தகைய தீர்ப்பை நீதிமன்றம் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்ரதார் நாயக் என்பவர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவின் அடிப்படையில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் சாவித்ரி ரதோ ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. நாயக் மற்றும் ரோஸலின் தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இடையே தொடர்ந்து பிரச்னைகள் நிலவி வந்துள்ளன.

  முன்னதாக, நாயக்கின் மனைவி அவர் மீது வரதட்சனை மற்றும் வீட்டு வன்முறை குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாயக் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. மீண்டும் இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதிகளுக்கு இடையே மீண்டும் பிரச்னை எழ இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

  கணவர் மீதான கோபத்தைத் தீர்க்க குழந்தையை ரோஸலின் தொடர்ந்து அடித்து சித்ரவதை செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த நாயக் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தொடர்ந்துள்ளார். குழந்தையை தாய் பலமுறை இரக்கமின்றி சித்ரவதை செய்யும் வீடியோ ஒன்றைப் பார்த்த பின்னரே நீதிமன்றம் இத்தகைய முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தையை ஏழு நாள்களுக்குள் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், குழந்தையை ஏழு நாள்களுக்குள் தந்தையிடம் ஒப்படைக்க தவறினால் காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
  Published by:Ram Sankar
  First published: