முகப்பு /செய்தி /இந்தியா / ஆன்லைனில் வழியைத் தேடி 3 மாதக் குழந்தையைக் கொலை செய்த தாய்- மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்

ஆன்லைனில் வழியைத் தேடி 3 மாதக் குழந்தையைக் கொலை செய்த தாய்- மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மத்தியப் பிரதேசத்தில் மூன்று மாதக் குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் மூழ்கடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய பிரதேசம், உஜ்ஜைன் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர். இங்கு வசிக்கும் பெண் சுவாதி. அவர், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார். குடும்பத்தினரும் குழந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அஇதையடுத்து அங்கு விரைந்த போலீசார், பெண்ணின் வீடு முழுவதும் சோதனையிட்டனர். அப்போது, வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து மிதந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாய், தந்தையிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

குழந்தை காணாமல் போனது தொடர்பாக குழந்தையின் தாயின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தை காணாமல் போன அன்று ஸ்வாதி மட்டுமே வீட்டிலிருந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து, அந்தப் பெண்ணிடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின்போது பெற்ற தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘குழந்தையைக் கொல்வதற்கு முடிவு செய்த தாய், எப்படி கொலை செய்யலாம் கூகுளில் தேடியுள்ளார். கொலை செய்யும் பல வழிமுறைகளை கூகுளில் தேடியுள்ளார். பின்னர், அந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, மூன்று மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்’ என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக ஸ்வாதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

First published:

Tags: Child murdered