தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தாடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு செல்லாமலும்,பெற்றோர் பேச்சை கேட்காமலும் ஊர் சுற்றி வந்தான். நாள் முழுவதும் கஞ்சா போதையில் இருக்கும் தன்னுடைய மகனை திருத்த அதனுடைய தாய் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
தன்னுடைய மகனை கஞ்சா போதையில் இருந்து மீட்டு அவனை திருத்த கோரி அந்த தாய் பலமுறை போலீசாரின் உதவியை நாடினார். போலீசார் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தங்கள் பாணியில் பலமுறை அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவன் திருந்தவில்லை.
இந்தநிலையில் தன்னுடைய மகனை எப்படி திருத்தலாம் என்று ஆலோசித்து அந்த தாய் மகனை எப்படியாவது போதையிலிருந்து மீட்டு அவனுக்கு சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
தன்னுடைய மகனின் நல்வாழ்விற்காக எதையும் செய்யத் துணிந்த அந்த தாய் மகனை வீட்டிற்கு எதிரில் உள்ள தூண் ஒன்றில் முதலில் கட்டி பின்னர் தன்னுடைய மகள் உதவியுடன் கண்ணில் மிளகாய் துளை கொட்டினார். கண் எரிச்சல் காரணமாக அலறி துடித்த மகனிடம் இனிமேல் நான் கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி கொடு என்று கேட்டார் அந்த தாய்.
Also Read : குன்னூர் தேயிலை தோட்டத்தில் பலத்த வெடி சத்தத்துடன் பறந்து வந்த கார்... என்ன நடந்தது?
ஆனால் அவன் கஞ்சாவை விட்டுவிடுகிறேன் என்று கூற தயங்கினான். எனவே மேலும் முகத்தில் மிளகாய் பொடியை பூசு தண்டனையை கடுமையாக்கினார் அந்த தாய். இந்த நிலையில் எரிச்சல் தாங்காமல் அந்த சிறுவன் இனிமேல் கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்தான்
இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் சூரியாபேட்டை போலீசார் விரைந்து சென்று தாய், மகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.